முறை தவறிய பேச்சு – ரசிகருடன் கட்டி உருண்ட கஸ்தூரி

மூகம், சினிமா, அரசியல் சார்ந்த பல கருத்துகளை தனது ட்விட்டரில் அவ்வப்போது பகிர்ந்து சர்ச்சையில் சிக்கிக் கொள்பவர் மாஜி நடிகை கஸ்தூரி.

அவர் போடுகிற கருத்துகளுக்கு சில நேரங்களில் ரசிகர்கள் பலர் ஏடாகூடமான எதிர்க் கருத்துகளை போட்டாலும், அது சம்பந்தமான குதர்க்கமான கேள்விகளை கேட்டாலும், அதற்கேற்ற பதில்களை கொடுத்து வருகிறார்.

அப்படித்தான் சமீபத்தில் வெளியான ‘தமிழ்ப்படம் 2’ படத்தில் படு கவர்ச்சியான குத்தாட்டம் ஒன்றைப் போட்டிருந்தார் கஸ்தூரி.

அதைப் பார்த்த ரசிகர்கள் பலர் ”ஊருக்கெல்லாம் உபதேசம் சொல்லி விட்டு வயசான காலத்தில் இப்படி கவர்ச்சி நடனம் ஆடுவது சரிதானா?” என்று ரசிகர்கள் பலரும் கஸ்தூரியின் குத்தாட்டம் பற்றி கேள்வி எழுப்பினார்கள்.

அதற்கும் சளைக்காமல் பதில் கொடுத்து சமாளித்த கஸ்தூரி தற்போது இன்னொரு ரசிகருடன் ட்விட்டரில் கட்டி உருண்டிருக்கிறார்.

குறும்புக்கார ரசிகர் ஒருவர் ‘தமிழ்ப்படம் 2’ படத்தில் கஸ்தூரியின் குத்தாட்டம் பற்றி கருத்து தெரிவிக்கையில் ”நான் உங்களை கவர்ச்சியாக தனிமையில் பார்க்க வேண்டும்” என பதிவிட்டிருந்தார்.

அதைப் பார்த்த கஸ்தூரி ”தமிழ்ப்படம் 2 படத்தின் ஒரு ஷோவின் எல்லா டிக்கெட்டுகளையும் நீங்களே வாங்கி, தியேட்டரில் தனியாக அமர்ந்து தனிமையில் பார்க்கவும்” என்று அசராமல் பதில் கொடுத்திருக்கிறார்.

கஸ்தூரியின் இந்த பதிலுக்கும் வழக்கம் போல பலரும் ஆதரவும், எதிர்ப்புமாக கருத்து தெரிவித்து வருகின்றனர்.

KasthuriTamizh Padam 2
Comments (0)
Add Comment