வாஸ்து மீன் சூப்பரா வேலை செய்யுது! : சிபிராஜ் செம ஹேப்பி

வ்வொரு வகை படங்களும் ஒவ்வொரு தரப்பு ரசிகர்களை ஈர்க்க கூடிய விதத்தில் உருவாகி இருக்கும். உதாரணத்திற்கு காதல், அதிரடி, நகைச்சுவை ஆகிய படங்கள் இளம் ரசிகர்களையும், அனிமேஷன் படங்கள் குழந்தை ரசிகர்களையும், செண்டிமெண்ட் திரைப்படங்கள் குடும்ப ரசிகர்களையும் ஈர்ப்பது இயல்பு.

ஆனால் ஒரு சில திரைப்படங்களுக்கு மட்டும் தான் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை இருக்கும் அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவரக்கூடிய தனித்துவமான வல்லமை இருக்கும். அப்படி ஒரு திரைப்படமாக தயாராகியிருப்பது தான் சிபிராஜ் – ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்திருக்கும் ‘கட்டப்பாவ காணோம்’.

இயக்குனர் மணி சேயோன் (இயக்குனர் அறிவழகனின் இணை இயக்குனர்) இயக்கத்தில் உருவாகி இருக்கும் இந்த ‘கட்டப்பாவ காணோம்’ படத்தை ‘விண்ட் சைம்ஸ் மீடியா என்டர்டைன்மெண்ட்’ நிறுவனத்தின் சார்பில் மதுசூதனன் கார்த்திக், சிவகுமார், வெங்கடேஷ், மற்றும் லலித் ஆகியோர் தயாரித்து இருக்கின்றனர். சந்தோஷ் தயாநிதியின் இசையில் உதயமாகி இருக்கும் ‘கடப்பாவ காணோம்’ பாடல்களும், ட்ரெலரும் சமீபத்தில் வெளியாகி, ரசிகர்கள் மற்றும் விமர்சகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றுள்ளதால் மிகுந்த உற்சாகத்தில் இருக்கிறாராம் நாயகன் சிபிராஜ்.

“கட்டப்பா’ என்னும் வாஸ்து மீன் தொடர்ந்து எங்களுக்கு நல்ல செய்தியை பெற்று தந்து கொண்டிருக்கிறது. கட்டப்பாவ காணோம் படத்தின் டிரைலர் மற்றும் பாடல்கள் ஆகிய இரண்டும் ரசிகர்களிடத்தில் அமோக வரவேற்பை பெற்று வருவதை பார்க்கும் பொழுது, எங்களுக்கு எல்லையற்ற மகிழ்ச்சியாக இருக்கிறது…. அதே போல் ‘கட்டப்பாவ காணோம்’ திரைப்படமும் அவர்களின் எல்லா எதிர்பார்ப்புகளையும் முழுவதுமாக பூர்த்தி செய்யும்…” என்று நம்பிக்கையுடன் கூறுகிறார் சிபிராஜ்.

வாஸ்து மீன் சூப்பரா வேலை செய்யுது போல…

Aishwarya RajeshKattapava KaanomSibiraj
Comments (0)
Add Comment