பாலிவுட்டுக்காக எடையை குறைத்த கீர்த்தி சுரேஷ்!

பாலிவுட் பட வாய்ப்பு என்றால் தென்னிந்திய நடிகைகளுக்கு உற்சாக பானம் தான்.

அசின், த்ரிஷா, ஸ்ருதிஹாசன் என பல தென்னிந்திய நடிகைகள் பாலிவுட்டுக்கு படையெடுத்திருக்கிறார்கள். இதில் அசின் மட்டும் அங்கேயே ஒரு தொழிலதிபரை திருமணம் செய்து கொண்டு செட்டிலாகி விட்டார்.

தற்போது இவர்கள் வரிசையில் பாலிவுட் படமொன்றில் நடிப்பதற்காக சென்ற கீர்த்தி சுரேஷ் அந்தப் படத்துக்காக ஆளே அடையாளம் தெரியாத அளவுக்கு உடல் எடையை வெகுவாகக் குறைத்து பொது இடங்களில் காட்சி தருகிறார்.

அதே உடல் எடையுடன் பி.சி.ஸ்ரீராம் ஒளிப்பதிவாளராக பணியாற்றும் ரங் தே என்ற தெலுங்கு படத்திலும் நாயகியாக கமிட்டாகியிருக்கிறார்.

தமிழில் மீண்டும் ஒரு ரவுண்டு வர நல்ல நல்ல கதைகளை கேட்டு வருகிறாராம் கீர்த்தி சுரேஷ்.

Keerthi SureshMovie NewsPC Sriram
Comments (0)
Add Comment