‘இது என்ன மாயம்’ படத்தில் அறிமுகமான கீர்த்தி சுரேஷுக்கு கை கொடுத்தது என்னவோ ‘ரஜினி முருகன்’ படத்தின் தாறுமாறான ஹிட்டு தான்.
அந்தப்படம் ரிலீசான அடுத்த சில வாரங்களிலேயே ‘பைரவா’ படத்தில் விஜய்க்கு ஜோடியாகி விட்டார் கீர்த்தி சுரேஷ்.
சமீபத்தில் ரிலீசான சிவகார்த்திகேயனின் ‘ரெமோ’ திரைப்படமும் பாக்ஸ் ஆபீஸ் ஹிட் லிஸ்ட்டில் சேர்ந்திருப்பதால் இன்றைய தேதியில் கோலிவுட் ஹீரோக்களின் ஹாட் கேக் கீர்த்தி தான்.
தமிழைப்போலவே தெலுங்கில் அல்லு அர்ஜூன், நானி போன்ற அங்குள்ள முன்னணி நடிகர்களின் படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார்.
இப்படி இரு மொழிகளிலும் கீர்த்திக்கு மவுசு கூடியிருப்பதால் புதிதாக கமிட் செய்யும் படங்களில் கவனமாக இருக்க ஆரம்பித்திருக்கிறார்.
ஆமாம், நயன் தாரா, த்ரிஷா, ஹன்ஷிகா என போய்க்கொண்டிருந்த இயக்குநர்கள் எல்லாம் இப்போது கீர்த்தியின் கால்ஷீட் கிடைத்தால் போதுமென்று அவர் வீட்டுக்கு படையெடுக்கிறார்கள்.
கதை கேட்டு அது தனக்கு பிடித்திருந்தால் மட்டுமே கால்ஷீட் கொடுக்கும் கீர்த்தி 50 வயது தாண்டிய ஹீரோக்களின் படங்களில் நடிக்க மறுப்பு சொல்லி விடுகிறார்.
வளரும் பொது இளவட்ட ஹீரோக்களுடன் நடிப்பது தான் நல்லது என்று அவரது நண்பர்கள் அட்வைஸ் செய்திருப்பதால் அதன்படியே படங்களையும் கமிட் செய்கிறார்.