ரஜினி முருகன் மாஸ் ஹிட் : கீர்த்தி சுரேஷ் சம்பளம் விர்ர்ர்…..!

ரு படம் ஹிட்டானால் போதும்! கதாநாயகன்களை விட, கதாநாயகிகள் காட்டும் பவுசுவுக்கு அளவே இருக்காது.

குறிப்பாக சம்பள விஷயத்தில் உடனடியாக கறார் காட்ட ஆரம்பித்து விடுவார்கள்.

ஏற்கனவே கோலிவுட்டிலும், டோலிவுட்டிலும் காஜல் அகர்வால், நயன் தாரா, த்ரிஷா போன்ற முன்னணி நடிகைகள் எல்லோரும் கோடிகளில் சம்பளம் கேட்க ஆரம்பித்து விட்டனர். தொடர்ந்து ஹிட்டுகளை கொடுத்ததால் மார்க்கெட் எகிறிப்போன ரகுல் ப்ரீத் சிங்க்கும் கூட இந்த கோடிகள் கிளப்பில் லேட்டஸ்ட்டாக இணைந்திருக்கிறார்.

இந்த லிஸ்ட்டில் அடுத்து கீர்த்தி சுரேஷின் பெயரும் இடம்பெறும் போலத் தெரிகிறது.

தமிழில் இது என்ன மாயம் படத்தில் அறிமுகமான கீர்த்தி சுரேஷுக்கு அந்தப்படம் சரியாகப் போகவில்லையே என்கிற வருத்தம் இருந்தது. ஆனால் பொங்கலுக்கு ரிலீசான ரஜினி முருகன் படமும், தெலுங்கில் நடித்த நேனு சைலஜா படமும் அடுத்தடுத்து ஹிட்டானதால் டபுள் ஜாக்பாட் அடித்த சந்தோஷத்தில் இருப்பவரைத் தேடி புதுப்பட வாய்ப்புகளும் குவிய ஆரம்பித்திருக்கின்றன.

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் தமிழ், தெலுங்கு இருமொழிபடமாக தயாராகும் புதுப்படத்திலும் கீர்த்தியைத்தான் கமிட் செய்ய பேச்சு வார்த்தை நடத்தி வருகிறார்கள். இப்படி வருகிற வாய்ப்புகளும் பெரிய ஹீரோக்களின் பட வாய்ப்புகளாக இருப்பதால் தனது சம்பளத்தை கணிசமாக அதிகரித்து விட்டார் என்கிற குற்றச்சாட்டை கீர்த்தி சுரேஷ் மீது வைக்க ஆரம்பித்திருக்கிறார்கள் தயாரிப்பாளர்கள்.

இந்த விஷயம் கீர்த்தியின் காதுகளை எட்டவும் எங்கே வருகிற வாய்ப்பும் வராமல் போய்விடுமோ என்கிற பயத்தில் நான் சம்பளத்தை கூட்டவில்லை. தயாரிப்பாளர்களாகவே அதிகமாக தரத்தயார் என்று பல்டியடித்திருக்கிறார்.

Keerthi SureshRajini Muruganகீர்த்தி சுரேஷ்ரஜினி முருகன்
Comments (0)
Add Comment