தனது நிறுவனம் சார்பில் கமல்ஹாசனை வைத்து அவர் தயாரித்த ‘உத்தம வில்லன்’ படம் கொடுத்த பொருளாதார ரீதியிலான பிரச்சனைகளும் அவர் விழாக்களில் தலைகாட்டாமல் இருந்ததற்கு இன்னொரு காரணம்.
நீண்ட இடைவெளிக்குப் பிறகு அவர் விஷால் ஹீரோவாக நடிக்க, சண்டக்கோழி-2 படத்தை இயக்கி வருகிறார்.
இதில் விஷால் ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடித்து வருகிறார். இன்னொரு நாயகியாக வரலட்சுமி நடிக்கிறார்.
கீர்த்தி சுரேஷ் கைவசம் விக்ரமுடன் ‘சாமி 2’, விஜய்யின் ‘சர்கார்’ என முன்னணி ஹீரோக்களின் படங்கள் இருக்கிறது. அந்த லிஸ்ட்டில் தான் ‘சண்டக்கோழி 2’ படத்தையும் வைத்திருந்தார்.
ஆனால் இப்போது படப்பிடிப்பில் நடப்பதைப் பார்த்து பெரும் அதிர்ச்சிக்குள்ளாகியிருக்கிறாராம்.
படத்தில் இரண்டு ஹீரோயின்கள் இருந்தாலும் உங்கள் கேரக்டர் தான் அதிக முக்கியத்துவம் கொண்டது என்று சொல்லித்தான் கீர்த்தி சுரேஷை படத்தில் கமிட் செய்தாராம் இயக்குனர் லிங்குசாமி.
ஆனால் படப்பிடிப்பில் எடுக்கப்படுகிற காட்சிகளைப் பார்த்த கீர்த்தி சுரேஷ் தன்னை விட வரலட்சுமிக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படுவதாக புகார் கூறியிருக்கிறார்.
‘நடிகையர் திலகம்’ படத்தில் என்னுடைய நடிப்பைப் பார்த்து ஊரே கொண்டாடியது. ஆனால் இந்தப் படத்தில் என் கேரக்டரை டம்மியாக்குகிறார்களே..? என்று அக்கம் பக்கத்தில் உள்ளவர்களிடம் சொல்லி புலம்புகிறாராம் கீர்த்தி சுரேஷ்.