விஜய் 60 : நாயகியானார் கீர்த்தி சுரேஷ்!

பொங்கலுக்கு ரிலீசான ‘ரஜினி முருகன்’ திரைப்படத்தின் மாபெரும் வெற்றி அப்படத்தின் தயாரிப்பாளரை மட்டுமல்ல, நாயகன், நாயகி உட்பட படக்குழுவினர் அனைவருக்கும் அடுத்த ஸ்டெப் எடுத்து வைக்க பெரிதும் உதவியிருக்கிறது.

குறிப்பாக முதல் படமாக ரிலீசான ‘இது என்ன மாயம்’ படத்தின் தோல்வியால் துவண்டு போயிருந்த நாயகி கீர்த்தி சுரேஷுக்கு ரஜினி முருகன் படத்தின் அசூர வெற்றி விஜய் பட வாய்ப்பை பெற்றுத் தந்திருக்கிறது.

இதனால் மகிழ்ச்சியில் திளைத்திருக்கும் அவர் தனது சம்பளத்தையும் சில லகரங்கள் அதிகரித்து விட்டதாக சொல்கிறார்கள்.

‘தெறி’ படத்தை முடித்த கையோடு விஜய்யின் 60வது படத்தை பரதன் இயக்கப் போவதாக அறிவிப்பு வெளியானது. வருகிற மே மாதம் இப்படத்தின் படப்பிடிப்பு ஆரம்பமாக உள்ள நிலையில் படத்தின் முதற்கட்ட வேலைகள் தடபுடலாக நடந்து வருகிறது.

இதில் விஜய்க்கு ஜோடியாக நடிக்க நயன்தாரா, சமந்தா, காஜல் அகர்வால் என பல முன்னணி நடிகைகளிடம் பேச்சு வார்த்தை நடந்து வந்த நிலையில் தற்போது படத்தின் நாயகியாக கீர்த்தி சுரேஷ் கமிட் செய்யப்பட்டிருக்கிறார்.

‘ரஜினி முருகன்’ படத்தின் மாபெரும் வெற்றி தான் கீர்த்தி சுரேஷூக்கு விஜய் பட வாங்கித் தந்திருக்கிறது. தனுஷ் ஜோடியாக பிரபு சாலமன் படத்திலும் நடித்து வரும் கீர்த்தி சிவகார்த்திகேயன் ஹீரோவாக நடிக்கும் புதுப்படத்திலும் கமிட்டாகியிருக்கிறார்.

KeerthySureshvijayVijay 60 கீர்த்தி சுரேஷ்விஜய்விஜய் 60
Comments (0)
Add Comment