இது குறித்து கே.ஜே.ஆர். ஸ்டூடியோஸ் நிறுவனம் கொட்டாபாடி ராஜேஷூடம் கேட்டபோது, ”இது எங்கள் தயாரிப்பு நிறுவனத்தின் பயணத்தில் மிகப்பெரிய மைல்கல். இந்த தருணம் மிகவும் பெருமையும் சந்தோஷமும் தரும் தருணம்.
‘தபாங்’ படத்தொடர் அடித்தட்டு ரசிகன் முதல் அனைவருக்கும் பிடிக்கும் வகையில் ஆக்ஷன், காமெடி, செண்டிமெண்ட், ரொமான்ஸ் என அனைத்தையும் தன்னகத்தே கொண்டது. ‘தபாங்’ படத்திற்கு தமிழகத்திலும் மிகுந்த வரவேற்பு உள்ளதால் ‘தபாங் 3’ படத்தினை தமிழிலும் டப் செய்து வெளியிடும் திட்டத்தில் உள்ளோம்.
இப்படம் அறிவிக்கப்பட்டபோதே வெற்றி நிச்சயமாகி விட்டது. மேலும் இதில் சல்மான்கானுடன் மீண்டும் நடனப்புயல் பிரபு தேவா இயக்குநராக இணைந்தவுடன் இப்படத்தின் வெற்றி 200 சதவீதம் உறுதியாகி விட்டது. தபாங் படத்தில் நடித்த அதே நடிகர்கள் மீண்டும் இப்படத்தில் இணைந்துள்ளார்கள். சோனாக்ஷி சின்ஹா, பிரகாஷ் ராஜ், அர்பாஸ்கான், மாஹி கில் இப்படத்தில் நடித்துள்ளார்கள். இப்படத்தில் புதியதொரு வேடத்தில் நான் ஈ புகழ் கிச்சா சுதீப் நடித்துள்ளார்.
டிசம்பர் 20 2019ல் படம் வெளியாகிறது.