‘குஸ்கா’ என்று தலைப்பு வைத்திருக்கும் இப்படத்தை எஃப் எம் கலைக்கூடம் சார்பில் எஸ் நாராயணன், எஸ் சரவணகுமார் இப்படத்தை தயாரிக்கிறார்கள். நாயகனாக கிஷோர் அறிமுகமாக, அவருக்கு ஜோடியாக சஸ்வதா நடிக்கிறார்.
சாலை விபத்தில் சிக்கிக் கொள்கின்ற ஒரு பெண்ணுடைய வாழ்வை பற்றிய உணர்வுபூர்வமான கதை. மிகவும் சிக்கலான ஒரு விஷயத்தை, இயக்குனர் மிகவும் நளினமாக காட்சிப்படுத்தி இருக்கிறார். இத்திரைப்படம் சாலை விபத்தின் தாக்கத்தை, இதுவரை சொல்லப்படாத முற்றிலும் புதிய கோணத்தில் அணுகி இருக்கிறது.
படத்திற்கு எம் எஸ் ராஜா ஒளிப்பதிவு செய்ய, ஆர் ஜி ஆனந்த் படத்தொகுப்பை கவனிக்க, கலையை நடராஜ் கவனிக்கிறார்.