மொக்க பாட்டு; மொக்க மியூசிக்! : ஜி.வி.பிரகாஷை ஓரங்கட்டும் இயக்குநர்கள்

ரொம்பவே நம்பிக் கொண்டிருந்த ”எனக்கு இன்னொரு பேர் இருக்கு” படம் ஜி.வி.பிரகாஷூக்கு மிகப்பெரிய தோல்விப்படமாகி வந்த சுவடே தெரியாமல் போய் விட்டது.

செலவழித்த தொகையில் கால்வாசி கூட கலெக்‌ஷனாக வராததால் அதிர்ச்சியடைந்த ‘லைகா’ நிறுவனம் இனி தயாரிக்கிற படங்களை நல்ல கதைகளாக தேர்ந்தெடுத்து தயாரிக்க வேண்டும் என்று அதன் முக்கிய பொறுப்பில் இருப்பவரை கூப்பிட்டு டோஸ் விட்ட சம்பவமும் நடந்தேறியிருக்கிறது.

இதற்கிடையே ஜி.வி.பிரகாஷின் இசையை நம்பி படம் இயக்க வரும் இயக்குநர்களும் அவரை ஓரங்கட்ட ஆரம்பித்திருக்கிறார்களாம்.

இசையமைப்பாளர் விஜய் ஆண்டனி நடிகரான பிறகு தனது படங்களைத் தவிர வெளிப்படங்களுக்கு இசையமைப்பதை நிறுத்தி விட்டார். குறிபிட்ட நேரத்துக்குள் அந்த வேலையை செய்து கொடுக்கவில்லை என்றால் கெட்ட பெயர் ஏற்படுமே? என்கிற முன் ஜாக்கிரதை தான் அதற்கு காரணம்.

ஆனால் ஜி.வியோ அப்படியில்லை.

கைவசம் ஒருடஜன் படங்களை ஹீரோவாக நடிக்க வைத்துக் கொண்டு இன்னொரு பக்கம் மற்ற இயக்குநர்களின் படங்களுக்கும் இசையமைக்கும் வேலையைச் செய்து வந்தார்.

இப்படி ஒன்றுக்கு இரண்டு வேலைகளில் அகலக்கால் வைத்ததால் சமீபகாலமாக அவர் இசையமைக்கும் படங்களின் பாடல்கள் கேட்கும்படி இல்லை, பாடல்களோ, பின்னணி இசையோ ரெண்டுமே மொக்கையாத்தான் இருக்கு என்று அவரை இசையமைப்பாளராக கமிட் செய்யும் இயக்குநர் வட்டமே முணுமுணுக்க ஆரம்பித்திருக்கிறது.

இதனால் அவரை தங்களுடைய படங்களில் ரெகுலராக வைத்திருந்தவர்கள் இப்போது சந்தோஷ் நாராயணன், இமான், ஜஸ்டின் பிரபாகரன் என்று மாற்று இசையமைப்பாளர்களை தேடிப்போக ஆரம்பித்திருக்கிறார்கள்.

இந்த விஷயம் ஜி.விக்கு தெரிந்தும் அலட்டிக் கொள்ளாமல் தான் ஹீரோவாக நடிக்கின்ற படங்களை மட்டும் கமிட் செய்து கலெக்‌ஷனை வாங்கும் வேலையில் மும்முரமாக இருக்கிறாராம்.

Enakku Innoru Per IrukkuG.V. PrakashG.V. Prakash Kumarஎனக்கு இன்னொரு பேர் இருக்குஜி.வி.பிரகாஷ்ஜி.வி.பிரகாஷ்குமார்
Comments (0)
Add Comment