“பணம் கேட்டு மிரட்டினார்கள்” லிங்கா பட தயாரிப்பாளர் அதிரடி


ரஜினிகாந்த் கே.எஸ் ரவிக்குமார் கூட்டணியில் 2014-ஆம் ஆண்டு வெளியான படம் லிங்கா. படம் வெளியாகும் நேரத்தில் படத்தின் கதை மீது ஒருவர் கேஸ் போட்டிருந்தார். அந்த வழக்கின் தீர்ப்பு தற்போது வெளியாகியுள்ளது. தீர்ப்பில் லிங்கா படத்தின் கதை யாரிடமும் இருந்து திருடப்படவில்லை என்பது தெரிந்துள்ளது.

இதை ஊடகங்களுக்கு மகிழ்ச்சியோடு தெரிவிக்கும் விதமாக தயாரிப்பாளர் ராக்லைன் வெங்கடேஷ் மற்றும் படத்தின் இயக்குநர் கே.எஸ் ரவிக்குமார் பத்திரிகையாளர்களைசந்தித்தனர். மேலும் பத்திரிகையாளர்கள் கேட்ட கேள்விக்கு தயாரிப்பாளர் ராக்லைன் வெங்கடேஷ் பதில் அளித்துப் பேசியதாவது,

“பணம் கேட்டு மிரட்டினார்கள். நிறைய பேர் பேரம் பேசி முடிக்கலாம் என்றும் சொன்னார்கள். நான் பத்தாயிரம் ரூபாய் கொடுக்க மாட்டேன். என்று சொல்லிவிட்டேன். எதுவா இருந்தாலும் கோர்டில் பார்த்துக்கொள்கிறேன் என்றேன். இனி ரஜினி சார் படம் தயாரிப்பது குறித்து ரஜினி சார் முடிவு செய்யவேண்டும். என் வாழ்க்கையில் ரஜினி சாரை வைத்து ஒருபடம் தயாரித்தேன் என்ற திருப்தி போதும்” என்றார்

actorrajinikanthksravikumarlinga
Comments (0)
Add Comment