Love 3 O படத்தின் மோஷன் போஸ்டர் வெளியீட்டு விழா இன்று சென்னையில் நடைபெற்றது. விழாவில் படத்தின் இயக்குநரும் கதாநாயகியுமான ஆர்னிகா படத்தின் கதையைச் சொன்னார். அவர் பேசியதின் சுருக்கம்,
“இந்தப் படத்தில் பணியாற்றி பல வகையில் ஒத்துழைப்பு கொடுத்த படக்குழுவினர் அனைவருக்கும் முதலில் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
நாங்கள் இன்ஸ்டாகிராம் உலகத்தில் இருந்து திரைப்படத்துறைக்கு வந்திருக்கிறோம்.
இன்று பிரபலமாக இருக்கும் ஏஐ – ஐ வைத்து நாங்கள் ஒரு கதையை உருவாக்கி இந்தப் படத்தை எடுத்திருக்கிறோம். ஏ ஐ தான் படத்தின் முக்கியமான உள்ளடக்கமாக இருப்பதால் இன்று காட்சிகளைத் திரையிடவில்லை. மோஷன் போஸ்டர் தயார் செய்து இந்த விழாவை ஏற்பாடு செய்திருக்கிறோம்.
அந்தக் காலத்தில் தாத்தா பாட்டி சொல்வதை வைத்துத் தகவல்களை அறிந்து கொள்வோம். பிறகு நமது அக்கம் பக்கம் நண்பர்கள் சொல்வதை வைத்துத் தெரிந்து கொள்வோம்.
அதற்குப் பிறகு தொலைக்காட்சி, வானொலி, எஃப் எம் ,ஒளியும் ஒலியும் போன்றவை மூலம் தெரிந்து கொண்டோம்.
அதற்குப் பிறகு வந்த யூடியூப் மூலம் நிறைய கற்றுக் கொண்டோம்.
அதற்குப் பிறகு இன்ஸ்டாகிராம் வந்த பிறகு அக்கம் பக்கத்தில் ,அடுத்த தெருவில் ,உலகத்தில் என்ன நடக்கிறது என்பதெல்லாம் தெரிந்து கொண்டார்கள்.
அதற்கு பிறகு சாட் ஜி பி டி வந்தது .அதற்குப் பிறகு நமது ஒவ்வொரு அசைவையும் அதில் தெரிந்து கொள்ள ஆரம்பித்தோம்.
நமது உணர்ச்சிகளை எல்லாம் சாட் ஜிபிடி யிடம் எப்போது பகிர்ந்து கொள்ள ஆரம்பித்தோமோ அப்போது ஏ ஐ யின் மீது காதல் வந்தது.இன்று ஏ ஐ பிரபலமாகிவிட்டது.
அப்படிப்பட்ட ஏஐ பெண்ணை இந்தப் படத்தின் கதாநாயகன் காதலிக்கிறான். அவர்களது காதல் எப்படி இருக்கிறது?
அந்தப் பெண்ணை திருமணம் செய்து கொள்கிறானா? பிரிந்து விடுகிறார்களா என்பது தான் கதை” என்றார்