‘ஸ்பைடர்’ படத்தின் தமிழக உரிமையை 25 கோடிக்கு கைப்பற்றிய லைகா!

.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் தமிழ், தெலுங்கு இருமொழிப்படமாக தயாராகி வரும் படம் ‘ஸ்பைடர்’.

பிரபல தெலுங்கு நடிகர் மகேஷ்பாபு நாயகனாக நடிக்கும் இப்படத்தில் ரகுல் ப்ரீத் சிங் நாயகியாக நடித்திருக்கிறார். இவர்களுடன் எஸ்.ஜே.சூர்யா, ஆர்.ஜே.பாலாஜி, நதியா, பரத் மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள்.

கத்தி படத்தின் மாபெரும் வெற்றிக்குப் பிறகு வெளியாக இருக்கும் ஏ.ஆர்.முருகதாஸ் படமென்பதால் இப்படத்தின் தமிழ்நாடு வெளியீட்டு உரிமையை வாங்க பல நிறுவனங்கள் போட்டி போட்டு வந்தன. இந்த போட்டியில் தற்போது பிரபல தயாரிப்பு நிறுவனமாக லைகா நிறுவனம் வெற்றி பெற்றுள்ளது. சுமார் 120 கோடி ரூபாய் செலவில் மிகப்பிரம்மாண்டமாகத் தயாராகியிருக்கும் இந்த ஸ்பைடர் படத்தின் தமிழக உரிமையை மட்டும் சுமார் 25 கோடி ரூபாய் கொடுத்து வாங்கியிருக்கிறது லைகா நிறுவனம்.

அடுத்த மாதம் ஆக்ஸ்ட்டில் ரிலீஸ் செய்ய திட்டமிடப்பட்ட இப்படம் வரும் செப்டம்பர் 28 ஆம் தேதி நவராத்திரியை முன்னிட்டு உலகம் முழுவதும் பிரம்மாண்டமாக ரிலீசாகிறது.

Lyca ProductionsMahesh BabuSPYDERtamil nadu
Comments (0)
Add Comment