‘மெர்சல்’ பிரச்சனையில் பாஜக வின் தேசியச் செயலாளர் ஹெச்.ராஜா நடிகர் விஜய்யை ‘ஜோசப் விஜய்’ என்று குறிப்பிட்டு ட்விட்டரில் பதிவிட்டிருந்தார். அவருடைய இந்த மதம் ரீதியிலான பதிவுக்கு பலரும் கடும் கண்டனம் தெரிவித்து வருகிறார்கள்.
அதோடு எங்கள் பெயரோடும் ஜோசப் என்கிற பெயரையும் சேர்த்தே வைத்துக் கொள்வோம் என்று விஜய் ரசிகர்கள் பதிலடி கொடுத்து வருகிறார்கள்.
இந்நிலையில் இந்தப் பிரச்சனையில் கருத்து தெரிவித்திருக்கும் பிரபல பாடலாசியர் விவேக் ”நான் ஒரு இந்து தான் ஆனால் என்னை நீங்கள் ‘ஜோசப் விவேக்’ என்றே அழைக்கலாம்” என்று அதிரடியாக தெரிவித்திருக்கிறார்.
இதுகுறித்து அவர் மேலும் கூறியிருப்பதாவது…
”மெர்சல் பிரசன்னை பூதாகரமாக வெடித்துள்ளது. பாஜக கட்சியினர் அந்தப் படத்துக்கு எதிராக பிரச்சனை செய்ய செய்ய சூப்பராக விளம்பரம் கிடைத்து படம் சூப்பர் ஹிட்டாகியுள்ளது. அந்த வகையில் மெர்சல் படக்குழு பாஜகவுக்கு நன்றி தெரிவிக்க வேண்டும். என்றவர்
பாஜக தேசிய செயலாளர் ஹெச். ராஜா தேவையில்லாமல் விஜய்யை ‘ஜோசப் விஜய்’ என்று கூறி மதத்தை இழுத்துள்ளார். இது விஜய் ரசிகர்கள் உள்பட யாருக்குமே சுத்தமாக பிடிக்கவில்லை.
மதப் பெயரை குறிப்பிட்டால் எங்களை பிரிக்கலாம் என்று நினைத்தால் இதை குறித்து வைத்துக் கொள்ளுங்கள். ”நான் ஒரு இந்து என்னை ஜோசப் விவேக்” என்று அழைக்கலாம் என்று குறிப்பிட்டுள்ளார்.
விவேக்கின் இந்தக் கருத்து சமூகவலைத்தளங்களில் வைரலாகி விஜய் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பையும், பாராட்டையும் பெற்று வருகிறது.