‘தல’யைப் பத்தி தப்பாப் பேசாதீங்க, ரசிகர்கள் செம அடி அடிப்பானுங்க… : எச்சரிக்கும் மா.கா.பா ஆனந்த்

விஜய் டிவியோட மனசு அப்படி போல…

திறமையானவர்களை அடையாளம் கண்டு அவர்கள் ஆயுசுக்கும் சின்னத்திரை மற்றும் பெரிய திரையில் நல்லபடியாக பொழைப்பைப் பார்த்துக் கொள்கிற அளவுக்கு வளர்த்து விட்டு விடுவார்கள்.

மிக குறுகிய காலத்தில் தனது திறமையால் இளம் ஹீரோக்களில் ஒருவராக இருக்கும் சிவ கார்த்திகேயனைத் தொடர்ந்து அதே அது இது எது நிகழ்ச்சித் தொகுப்பாளரான மா.கா.பா. ஆனந்த்தும் தமிழ் சினிமாவில் ஹீரோவாக களமிறங்கியிருக்கிறார்.

வானவராயன் வல்லவராயன் படத்தில் இரண்டு ஹீரோக்களில் ஒருவராக நடித்த மா.கா.பா சோலோ ஹீரோவாக நடித்து வரும் படங்களில் ஒன்று தான் ‘அட்டி’. அவருக்கு ஜோடியாக அஷ்மிதா அறிமுகமாகியிருக்கிறார்.

இசையமைப்பாளர் சுந்தர்.சி.பாபு தனது நண்பர்களுடன் இணைந்து தயாரித்திருக்கும் இப்படத்தை இயக்குனர் சுராஜின் உதவியாளரான விஜயபாஸ்கர் இயக்கியிருக்கிறார்.

சென்னையின் மையப்பகுதிகளான காசிமேடு, ராயபுரம், ஐஸ்ஹவுஸ் ஆகிய பகுதிகளில் வசிக்கும் இளைஞர்களின் யதார்த்தமான வாழ்க்கையையும் அன்றாடம் அவர்கள் சந்திக்கும் அனைத்து விஷயங்களையும் சுவாரஸ்யமாக நகைச்சுவையுடன் விவரிக்கிறது படம்.

இந்த ஏரியாக்கள் என்றாலே கானா இல்லாமல் இருக்குமா? ஆமாம் படத்தில் ஒரு கானா பாடகராக வருகிறார் மா.கா.பா அதோடு இன்னொரு சுவாரஷ்யமான செய்தியாக படத்தில் பக்காவான அஜித் ரசிகராகவும் வருகிறாராம் மா.கா.பா.

எப்போது பார்த்தாலும் அஜித் அஜித் என்றே உருகும் மா.கா.பா தன்னை சுற்றி நடக்கும் ஒரு சம்பவத்தை தன் நண்பர்கள் உதவியோடு எப்படி கையாளுகிறார் என்பதே மெயின் மேட்டராம்.

ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் தர லோக்கலில் இப்படத்தின் ட்ரெய்லரை திரையிட்டுக் காட்டினார்கள்.

படத்தின் ட்ரெய்லரில் தன்னை ஸ்டேஷனில் உட்கார வைத்திருக்கும் போலீசையே எச்சரிக்கும் விதமாக மா.கா.பா ஒரு டயலாக் பேசுகிறார்.

அந்த டயலாக் ஒண்ணே போதும்! படத்தோட வெற்றியை அஜித் ரசிகர்கள் பார்த்துப்பாங்க…

அப்படியென்ன டயலாக்?

”சார் தமிழ்நாட்டுக்கே ஒரே ‘தல’ தான். ‘தல’யைப்பத்தி தப்பாப் பேசாதீங்க, ரசிகர்கள் காதுல உழுந்துச்சி செம்ம அடி அடிப்பானுங்க…”

Ajith FansAtti AjithMa Ka Pa Ananthஅஜித்அஜித் ரசிகர்அட்டிமா.கா.பா.ஆனந்த்
Comments (0)
Add Comment