தனுஷ் ரசிகர்களுக்கு சந்தோஷமான செய்தி சொன்ன ‘மாரி 2’ படக்குழு!

‘மாரி’ படத்தின் வெற்றியைத் தொடர்ந்து அதன் இரண்டாம் பாகமாக பாலாஜி மோகன் – தனுஷ் கூட்டணியில் தயாராகியிருக்கும் படம் ‘மாரி 2’.

தனுஷ் ஜோடியாக சாய்பல்லவி நடிக்கவரலட்சுமி சரத்குமார், கிருஷ்ணா, டோவினோ தாமஸ் ஆகியோர் முக்கிய கேரக்டர்களில் நடித்திருக்கிறார்கள்.

கடந்த சில மாதங்களாக விறுவிறுப்பாக நடைபெற்று வந்த நிலையில் தனுஷ் ரசிகர்களுக்கு சந்தோஷமான செய்தி ஒன்றை படக்குழு வெளியிட்டுள்ளது.

அந்த வகையில் ’மாரி 2’ படத்தின் படப்பிடிப்பு கடைசியாக ஒரு சண்டை காட்சியுடன் இன்று நிறைவடைந்தது.

இன்னும் ஒரே ஒரு பாடல் காட்சியின் படப்பிடிப்பு மட்டும் பாக்கி உள்ளது. விரைவில் அந்த பாடல் காட்சியும் எடுக்கப்பட இருக்கிறது.

’மாரி’ படத்துக்கு அனிருத் இசையமைத்திருந்தார். ஆனால் இந்த ’மாரி 2’ படத்துக்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.

தனது வுண்டர்பார் நிறுவனத்தின் சார்பில் தனுஷ் இப்படத்தை மிகப்பிரம்மாண்டமாக தயாரித்து வருகிறார்.

Dhanushmaari 2Maari 2 MovieSai Pallavi
Comments (0)
Add Comment