மார்ச் 12 முதல் ஸ்ட்ரீம் ஆகிறது ‘மேட் இன் கொரியா’ !

ரைஸ் ஈஸ்ட் என்டர்டெயின்மென்ட் தயாரிப்பில், ரா.கார்த்திக் இயக்கத்தில் நடிகர்கள் பிரியங்கா மோகன் மற்றும் தென் கொரிய நடிகர் பார்க் ஹை-ஜின் ஆகியோர் நடிப்பில் உருவாகியுள்ள ’மேட் இன் கொரியா’ இரண்டு கலாச்சாராங்களை ஒன்றிணைக்கிறது.

குழந்தைப் பருவத்தில் கேட்ட கதைகள், வகுப்பறையில் அமர்ந்திருக்கும் தருணங்கள் அல்லது வீட்டைத் தாண்டிய தொலைதூர உலகங்களில் என எதிர்பாராத இடத்தில் இருந்துதான் கனவுகள் தொடங்குகின்றன. செண்பாவுக்கும் இது விதிவிலக்கல்ல! தமிழ்நாட்டின் ஒரு சிறிய ஊரில் தனது அன்றாட வாழ்க்கையை தாண்டி, ஒருநாள் தென் கொரியாவுக்கு பயணம் செய்ய வேண்டும் என்ற கனவு செண்பாவுக்கு இருக்கிறது. அந்த கனவு நனவாகும் வாழ்க்கைப் பயணத்தை சொல்லும் ‘மேட் இன் கொரியா’ நெட்ஃபிலிக்ஸ் தளத்தில் வரும் மார்ச் 12 முதல் ப்ரீமியர் ஆகிறது.

ரைஸ் ஈஸ்ட் என்டர்டெயின்மென்ட் தயாரிப்பில், ரா.கார்த்திக் எழுதி இயக்கியுள்ள ‘மேட் இன் கொரியா’ செண்பா என்கிற செண்பகத்தின் கதையை சொல்கிறது. கொரிய கலாச்சாரத்தின் மீது சிறுவயது முதலே ஈர்ப்பு கொண்டவளான செண்பா அதை அனுபவித்து பார்க்க வேண்டும் என விரும்புகிறாள். சியோலில் எதிர்பாராத விதமாக அவளுக்கு அந்த அனுபவம் கிடைக்கிறது. ஆனால், அவள் கற்பனை செய்ததை விட யதார்த்தம் பல சவால்களை அவள் முன் நிறுத்துகிறது. அதைத்தாண்டி அவளின் சுயத்தை கண்டுபிடிக்கும் நெகிழ்ச்சியான இந்தப் பயணமே ‘மேட் இன் கொரியா’.

Actress Priyanka MohanMade In Korea movie