விஜய் சேதுபதியுடன் நடிக்க மறுத்தாரா..? : மடோனாவை ஏம்ப்பா வம்புக்கு இழுக்கிறீங்க?

பார்பி பொம்மை போல மொழு மொழுவென்றிருக்கிறார் ‘பிரேமம்’ புகழ் மடோனா செபாஸ்டியன். சென்ற வாரம் ரிலீசான ‘காதலும் கடந்து போகும்’ படத்தின் அறிமுக நாயகியும் கூட!

விஜய் சேதுபதியுடன் இணைந்து நடித்த அனுபவத்தைப் பற்றிக் கேட்டால் புன்னகையோடு பேசுகிறார்…

அவர் ஒரு யதார்த்தமான ஹீரோ! ரொம்பவும் எளிமையானவர். ஷூட்டிங் ஸ்பாட்டில் ஆரம்ப நாட்களில் இருவரும் அதிகமாக பேசிக்கொண்டதில்லை. ஆனால் போகப்போக நண்பர்களாகி விட்டோம்.

என்றவர் ‘மை டியர் டெஸ்பெரடோ’ கொரியன் படத்தை விட இந்தப்படம் பார்க்க அழகாக இருக்கிறது. அதற்கு காரணம் நலன் குமாரசாமி தான். என்கிறார்.

சரி கவர்ச்சி இல்லாமல் தமிழ்சினிமாவில் காலம் தள்ள முடியுமா? என்றால் ஏன் முடியாது? நல்ல கதைகளில் நடித்தால் கண்டிப்பாக முன்னணி நடிகையாக வரலாம். என் உடல் வாகுக்கு கவர்ச்சி கண்டிப்பாக செட் ஆகாது. அதனால் நான் கவர்ச்சியாக நடிக்கவே மாட்டேன். என்றவர் இப்போதைக்கு தமிழில் எந்த படத்தையும் கமிட் செய்யவில்லை.

இனிமேல் தான் அதையெல்லாம் கவனிக்க வேண்டும் என்றவரிடம் அந்த கேள்வியைக் கேட்காமல் இருக்க முடியுமா?

ஆமாம், இந்தப்படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நடிக்கக் கூப்பிட்ட போது மறுத்து விட்டீர்களாமே? என்றோம்.

அய்யோ… அதெல்லாம் இல்லீங்க… அது தப்பான நியூஸ். அவர் ஒரு திறமையான நடிகர். அவர் கூட நடிக்க எனக்கென்ன கசக்குது என்றார்.

பொழைச்சுக்குவே தாயீ…

Kadhalum Kadanthu PogumMadonna SebastianVijay Sethupathiகாதலும் கடந்து போகும்மடோனா செபாஸ்டியன்விஜய் சேதுபதி
Comments (0)
Add Comment