கதை சொல்லப் போகும் இயக்குநர்களை கடுப்பேற்றி அனுப்பும் ‘ப்ரேமம்’ நாயகி!

லையாளத்தில் ரிலீசான ஹிட் படம் ‘ப்ரேமம்’ மூலம் ரசிகர்களின் மனசை கொள்ளை கொண்டவர் மடோனா செபாஸ்டியன்.

படத்தில் அவரது நடிப்பைப் பார்த்து தான் தமிழில் விஜய் சேதுபதி ஜோடியாக ‘காதலும் கடந்து போகும்’ படத்தில் நாயகியாக அறிமுகம் செய்யப்பட்டார்.

தமிழ் மட்டுமில்லாமல் தெலுங்கிலும் வாய்ப்புகள் வருவதால் மலையாளம், தமிழ், தெலுங்கு என மும்மொழிகளிலும் பிஸியாக நடிக்க ஆரம்பித்திருக்கிறார்.

இயக்குநர்களே தேடி வந்து வாய்ப்பு தருவதால் ஒவ்வொரு படத்தையும் மூன்று முக்கியமான கண்டிஷன்களை போட்டுத்தான் கமிட் செய்கிறாராம்.

கவர்ச்சியாக நடிக்க மாட்டேன், ஹீரோக்களை கட்டிப் புடிக்க மாட்டேன், முத்தம் கொடுக்க மாட்டேன் என்பது தான் அவர் போடும் கண்டிஷன்கள்.

அவரது இந்த கண்டிஷன்களைக் கேட்டு கடுப்பாகும் இயக்குநர்கள் என்ன இந்தப் பொண்ணும் ஹதர் அலி காலத்துல இருக்குது என்று மாற்று நடிகைகளை தேடிப்போக ஆரம்பித்திருக்கிறார்கள்.

Madonna SebastianPremamப்ரேமம்மடோடா செபாஸ்டியன்
Comments (0)
Add Comment