ஜலீல் இயக்கும் இப்படத்தில் பர்ஸ்ட் லுக் போஸ்டரில் கஞ்சாவுக்கு அடிக்ட் ஆகி விட்டாரோ என்று நம்பும் விதமாக, கையில் கஞ்சா சுருட்டை ஊதித்தள்ளுவது போல போஸ் கொடுத்தது ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
போஸ்டரைப் பார்த்தவர்களில் சிலர் ஹன்ஷிகாவின் துணிச்சலை பாராட்டினாலும், பலர் விஜய் போன்ற ஒரு முன்னணி ஹீரோ இப்படி போஸ் கொடுத்தால் உடனே எதிர்ப்பவர்கள், ஒரு முன்னணி நடிகை இப்படி கஞ்சா குடிப்பது போலவோ, பீர் குடிப்பது போலவோ போஸ் கொடுத்தால் யாருமே எதிர்ப்பதில்லையே ஏன்? என்று கடும் கோபத்தோடு கேள்வி எழுப்பியிருக்கிறார்கள்.
ஆனால் ”ஹன்சிகா கஞ்சா குடிக்கும் புகைப்படம் படத்தில் ஒரு கேரக்டர் தான். அந்த கேரக்டர் செய்வதை விமர்சிப்பது முறையல்ல” என்கிறார் படத்தின் இயக்குனர் ஜலீல்.
இன்னொரு பக்கம் படத்தின் பப்ளிசிட்டிக்காக இப்படிப்பட்ட போஸ்டர்களை வெளியிடுவதும் வாடிக்கையாகி விட்டது, டைரக்டர்கள் கதையை நம்புவதை விட இப்படிபட்ட சர்ச்சையை போஸ்டர்களை வெளியிட்டு பரபரப்பை கிளப்பி, அதன் மூலம் வெற்றி பெறவே நினைக்கிறார்கள் என்றும் சொல்கிறார்கள்.
ஏம்ப்பா டைரக்டர்ஸ் கேட்டுக்கங்கப்பா..