சிங்கராக மாறினார் துருவ் விக்ரம்!

‘சீயான்’ விக்ரம் நடிப்பில் தயாராகியிருக்கும் ‘மகான்’ திரைப்படம் பல சாதனைகளை படைக்கவிருப்பது உறுதியாகி உள்ளது. இத் திரைப்படம் பற்றிய அறிவிப்பு வெளியிடப்பட்டதிலிருந்து ரசிகர்களின் உற்சாகத்துடன் சரியான அதிர்வை ஏற்படுத்தி வருகிறது. இந்த திரைப்படம் ‘சீயான்’ விக்ரமின் 60வது படம் என்பதுடன், இந்தப் படத்தில் அவருடைய மகனும், நடிகருமான துருவ் விக்ரமுடன் முதன்முறையாக இணைந்து நடித்திருக்கிறார். இந்த திரைப்படம் அமேசான் ப்ரைம் வீடியோவில் பிப்ரவரி 10ஆம் தேதி முதல் உலகளவில் வெளியாகிறது. இதற்கு ஒரு நாள் முன்னதாக நடிகர் துருவ் விக்ரம் முதன்முதலாக சொந்த குரலில் பாடிய ‘மிஸ்ஸிங் மீ ..’ எனத் தொடங்கும் ராப் பாடல் வெளியாகிறது. துள்ளலான நடனத்துடன் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் உருவாகி இருக்கும் ‘ மிஸ்ஸிங் மீ…’ என்ற பாடலை பாடலாசிரியர் விவேக்குடன் இணைந்து நடிகர் துருவ் விக்ரமும் எழுதியிருக்கிறார். இந்தப் பாடலுக்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருக்கிறார்.

actor bobby simhaActor dhruvvikramActor vikramActress simranDirector Karthik Subbarajmahaan movie