நான்கு மொழிகளில் வெளியானது ‘மகான்’ பாடல்!

மிகவும் எதிர்பார்ப்பில் இருக்கும் ஆக்ஷன் திரில்லர் திரைப்படம் ‘மகான்’. ‘சீயான்’ விக்ரம் நடிப்பில் தயாராகி இருக்கும் அறுபதாவது திரைப்படமான ‘மகான்’ படத்திலிருந்து மூன்றாவது பாடலாக ‘போனா போவுறான்னு..’ எனத் தொடங்கும் பாடல் வெளியாகியிருக்கிறது. இந்தப் பாடல் தமிழைத் தவிர தெலுங்கில் ‘போதே போனி..’ என்றும், மலையாளத்தில் ‘வேண்டா வேண்டா என்னு…’ என்றும், கன்னடத்தில் ‘ ஹோட்ரே ஹோக்லி அன்டே..’ என்றும் இந்தப்பாடல் வெளியாகியிருக்கிறது. இந்த பாடலுக்கு சந்தோஷ் நாராயணன் இசை அமைத்திருக்கிறார். நீங்கள் யாரையாவது விரும்பும்போது அவர்கள் உங்களை விரும்பவில்லை என்றால், அவர்களை விடுவித்து விடுங்கள் என்பதை நுட்பமான செய்தியுடன் கூடிய பாடலாக ‘போனா போவுறான்னு..’ என்ற பாடல் அமைந்திருக்கிறது.\

Actor dhruvvikramActor vikramDirector Karthik Subbarajmahaan movie