90 கதைகளில் ஒரு அற்புதம்! : ஆதியின் பொறுமைக்கு கிடைத்த ‘மரகத நாணயம்’

‘யாகாவாராயினும் நா காக்க’ படத்துக்குப் பிறகு தமிழில் ஆதியைப் பார்க்க முடியவில்லை. ஆனால் தெலுங்கில் இரண்டு படங்களை முடித்து விட்டார்.

அந்த காத்திருத்தலுக்கும் காரணம் இருந்திருக்கிறது. இதோ என்னோட சினிமா கேரியர்ல நான் கேட்டு அசந்து போன கதைதாங்க இந்த ‘மரகத நாணயம்’ என்கிறார் மீண்டும் நல்ல கதையோடு தமிழில் எண்ட்ரி கொடுக்கும் சந்தோஷத்தோடு!

ஆதிக்கு ஜோடியாக நிக்கி கல்ராணி நடிக்க இவர்களுடன் ஆனந்த ராஜ், முனீஸ்காந்த், கோட்டா சீனிவாசராவ் என நட்சத்திரப் பட்டாளங்களுடம் தயாராகியிருக்கும் இப்படத்தை இயக்கி இயக்குநராக அறிமுகமாகிறார் ஏ.ஆர்.கே சரவண்.

இந்தப்படம் ஒரு ஃபேண்டஸி த்ரில்லர் காமெடிப்படம். 1100, 1992, 2016ன்னு மூன்று காலகட்டங்கள்ல நடக்கிற கதை. முதல் காலகட்டமான 1100 ஐ மட்டும் இப்போ இருக்கிற சிச்சுவேஷன்ல காட்ட முடியாது. அதனால அதை மட்டும் அனிமேஷன்ல காட்டியிருக்கோம். அதுக்கப்புறம் வர்ற காலகட்டங்கள்ல 1992 கொஞ்ச நேரம் வரும். அதன்பிறகு 2016 காலகட்டத்தை முழுமையாக காட்டியிருக்கிறோம்.

“ரசிகர்கள் இதுவரை ஆதி சாரை ஒரு அதிரடி நாயகனாக தான் பார்த்து இருப்பார்கள். ஆனால் எங்களின் மரகத நாணயம் மூலமாக முற்றிலும் மாறுபட்ட ஆதி சாரை அவர்கள் காண இருக்கிறார்கள். இதுவரை எவரும் கண்டிராத நகைச்சுவை குணங்களை கொண்டு நாங்கள் இந்த படத்தை உருவாக்கி இருக்கிறோம். ஒவ்வொரு காட்சியிலும் கன கச்சிதமாக நடித்து, மரகத நாணயத்துக்கு ஒளியைக் கூட்டிய கதாநாயகன் ஆதி சாருக்கு நன்றி என்றார் இயக்குநர் சரவண்.

“எங்கள் ஆக்ஸஸ் பிலிம் பேக்டரி’ நிறுவனத்தை பொறுத்த வரை கதை தான் ஹீரோ. வலுவான கதை களங்கள் கொண்ட திரைப்படங்களை மட்டுமே நாங்கள் தேர்வு செய்து தயாரித்து வருகிறோம். வெறும் லாபம் சம்பாதிப்பதில் மட்டுமில்லாமல், தரமான திரைப்படங்களின் அற்புதத்தை ரசிகர்களுக்கு உணர்த்த வேண்டும் என்பதில் தான் எங்களுக்கு நாட்டம் அதிகம்….அதனை எங்கள் மரகத நாணயம் திரைப்படம் உறுதிப்படுத்தும். 90 கதைகளை கேட்டு, அதில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு அற்புதமான படைப்பு தான் இந்த மரகத நாணயம்..” என்று கூறுகிறார் படத்தின் தயாரிப்பாளரும், ‘ஆக்ஸஸ் பிலிம் பேக்டரி’ நிறுவனருமான ஜி டில்லி பாபு.

“திரைப்படங்களில் பொதுவாக இருக்கும் அதிரடி காட்சிகள் மற்றும் மசாலா காட்சிகள் இந்த படத்தில் இருக்காது. ஆனால் படம் ஆரம்பித்த நொடியில் இருந்து முடியும் நொடி வரை, ரசிகர்கள் ஒவ்வொருவரும் உற்சாகத்தில் மிதப்பார்கள்…..இதுவரை யாரும் பார்க்காத நகைச்சுவை பாணியை நாங்கள் எங்களின் மரகத நாணயம் படத்தில் உள்ளடக்கி இருப்பதே அதற்கு காரணம் என்னுடைய புதிய அவதாரத்திற்கு பிரகாச வெளிச்சத்தை இந்த மரகத நாணயம் ஏற்படுத்தி தரும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கின்றது.” என்றார் ஆதி.

AadhiMaragatha NaanayamMaragatha Naanayam Movie NewsNikki Galrani
Comments (0)
Add Comment