ஆரவ் படத்தில் ஆதிக்கம் செலுத்தும் நிகிஷா படேல்!

யக்குநர் சரண் இயக்கும் மார்க்கெட் ராஜா எம்.பி.பி.எஸ் படத்தில் ஆரவ்வுடன் இணைந்துள்ளார் நிகிஷா படேல்.

இது குறித்து அவர் கூறியதாவது, “நான் இந்தப் படத்தில் ஆரவ் உடைய காதலியாக நடித்திருக்கிறேன். மேலும் படத்தில் மிகவும் ஆதிக்கம் செலுத்தும் கதாபாத்திரத்தில் நடித்துள்ளேன். நான் ஏற்கனவே முதல்கட்ட படப்பிடிப்பை முடித்து விட்டு அடுத்த கட்ட படப்பிடிப்பிற்காக காத்துக் கொண்டிருக்கிறேன்.

இயக்குநர் சரண் என்னை மிகவும் ஃபேஷனான கதாபாத்திரத்தில் வடிவமைத்துள்ளார். ஒளிப்பதிவாளர்கே.வி குகன் தனது வேலையை அருமையாக செய்துள்ளார்.”

நிகிஷா படேல் தற்போது ஜி.வி பிரகாஷ் குமார் நடித்து இயக்குநர் எழில் இயக்கும் திகில் படத்திலும் இணைந்துள்ளார். அந்த படத்தின் படப்பிடிப்பையும் முடித்து விட்டார். சமீபத்தில் தான் இவர் டி-சீரிஸ் இந்தி இசை ஆல்பத்தில் நடித்திருக்கிறார். மேலும் இவர் நடித்த இரண்டு திரைப்படங்களின் அதிகாரப்பூர்வ அறிவிப்புக்காக காத்திருக்கிறார்.

AaravDirector SaranMarket Raja MBBSMovie NewsNikesha Patel
Comments (0)
Add Comment