‘மெஹந்தி சர்க்கஸ்’ ஹீரோவான சமையல் சக்கரவர்த்தி!

‘ஜோக்கர்’ பட இயக்குநர் ராஜூமுருகன் கதை, வசனத்தில் ஸ்டூடியோ க்ரீன் சார்பில் தயாராகியிருக்கும் படம் ‘மெஹந்தி சர்க்கஸ்’. அவரது அண்ணன் சரவண ராஜேந்திரன் இயக்கியிருக்கிறார்.

சிறந்த சமையல் கலைஞராக கோவை மாதம்பட்டியில் பிரசித்தி பெற்ற கேட்டரிங் உணவகத்தை நடத்தி வரும் ரங்கராஜ் இப்படத்தில் நாயகனாக நடித்திருக்கிறார். நாயகியாக ஸ்வாதி த்ரிபாதி நடிக்க, இவர்களுடன் விக்னேஷ் காந்த், வேல ராமமூர்த்தி மற்றும் பலர் நடித்துள்ளனர். படத்திற்கு ஷான் ரோல்டன் இசையமைத்திருக்கிறார்.

இப்படத்தில் ஹீரோவானது பற்றி பத்திரிகையாளர் சந்திப்பில் ரங்கராஜ் பேசியதாவது,

“எல்லோரும் ஏன் சமையல் பிஸ்னெஸை விட்டுவிட்டு நடிக்க வந்தீர்கள்? என்று கேட்டார்கள்.

ஆனால் இப்படியான தரமான சினிமாவை மிஸ் பண்ண முடியாது. என்னைப் பொறுத்தவரை சினிமா தொழிலும், சமையல் தொழிலும் ஒன்று தான். என்னைச் சரியாக வழிநடத்தும் ஈஸ்வரன் அப்பாவுக்கு நன்றி.

இந்தப் படத்தை வெளியீடும் சக்திவேல் எப்படியும் இந்தப்படம் ஜெயிக்கும் என்று நம்பிக்கை தெரிவித்தார். இந்த மாதிரி ஒரு ஸ்ட்ராங்கான டீமிடம் இருந்து நான் அறிமுகமாவதை பெருமையாக நினைக்கிறேன்” என்றார்

படம் வரும் 19-ம் தேதி அன்று வெளிவருகிறது.

KE Gnanavel RajaMadhampatty RangarajMehandi CircusPress MeetRJ VigneshSaravana Rajendhiran
Comments (0)
Add Comment