நாயை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள ‘மைலோ’ திரைப்படத்தின் டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்று வருகிறது. SSR Entertainment சார்பில் K I சுரேஷ் தயாரித்துள்ள இப்படத்தில் முகேன் ராவ் (Mugen Rao) கதாநாயகனாக நடித்துள்ளார். இப்படத்தை கவின் மூர்த்தி எழுதி இயக்கியுள்ளார்.
தற்போது வெளியிடப்பட்டுள்ள ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரில் முகேன் ராவ் அடர் நீல நிற லெதர் ஜாக்கெட் அணிந்து கம்பீரமாக நிற்க, அவருக்கு அருகில் தங்க நிறத்திலான செல்ல நாய் இடம்பெற்றுள்ளது. மலைப்பகுதியையும் இயற்கைச் சூழலையும் பின்னணியாகக் கொண்ட போஸ்டரில், ‘MORE THAN A PET A SILENT WITNESS’ என்ற வாசகம் இடம்பெற்றிருப்பது படத்தின் மர்மம் நிறைந்த கதைக்களம் குறித்த எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.
18 ஆண்டுகளுக்கு முன்பு நடைபெற்ற ஒரு குற்றத்தையும், ‘மைலோ’ எனும் செல்ல நாயையும் மையமாகக் கொண்டு இப்படத்தின் கதை அமைக்கப்பட்டுள்ளது. பல ஆண்டுகளுக்கு முன்பு நடந்த குற்றத்தின் பின்னணியில் மறைந்திருக்கும் உண்மையைச் செல்ல நாயின் உதவியுடன் நாயகன் எவ்வாறு கண்டுபிடிக்கிறார் என்பதே இப்படத்தின் மையக்கருவாகும். அனைத்து விதமான கமர்ஷியல் அம்சங்களுடன், அனைத்து ரசிகர்களும் ரசிக்கும் வகையில் இப்படம் உருவாகியுள்ளது.
முகேன் ராவுடன் தேஜு அஸ்வினி, இளவரசு, முனீஷ்காந்த், பிக் பாஸ் புகழ் ஜனனி, ‘எங்கள் அண்ணா’ படத்தின் மூலம் கவனம் பெற்ற இந்திரஜா, 20 ஆண்டுகளுக்குப் பிறகு தமிழ் திரைப்படத்திற்கு ரீ-என்ட்ரி கொடுத்து முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். சுரேஷ் மேனன், ஆதித்யா கதிர் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.