குழந்தைகளுக்காக கோடையில் ரிலீசாகும் ராகவா லாரன்ஸின் ‘முனி 4 காஞ்சனா 3’

ராகவா லாரன்ஸ் இயக்கி, ஹீரோவாக நடித்து தயாரித்திருக்கும் படம் ‘முனி 4 காஞ்சனா 3’.

வேதிகா, ஓவியா இருவரும் நாயகிகளாக நடித்துள்ள இப்படத்தில் கோவை சரளா, தேவதர்ஷினி, ஸ்ரீமன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

சன் பிக்சர்ஸ் வெளியிடும் இப்படத்தின் படப்பிடிப்பு சென்னை மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் நடைபெற்று, தற்போது போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் நடைபெற்று வருகின்றன.

பல மாதங்களாக படப்பிடிப்பில் இருந்த இந்தப்படம் வருகிற ஏப்ரல் மாதம் 19-ம் தேதி படம் ரிலீஸாகும் என அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது படக்குழு.

ஏப்ரல் மாதம் கோடை விடுமுறை என்பதால், குழந்தைகளைக் குறிவைத்து அந்த மாதத்தில் இப்படம் வெளியிடப்பட இருக்கிறது. இதற்கு முன்பு வெளியான ‘காஞ்சனா 2’ படமும் ஏப்ரல் மாதம் வெளியிடப்பட்டு, கிட்டத்தட்ட 100 கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்தது குறிப்பிடத்தக்கது.

ஏப்ரல் 18-ம் தேதி தமிழகத்தில் மக்களவைத் தேர்தல் நடைபெறும் நிலையில், அதற்கு மறுநாள் ‘காஞ்சனா 3’ ரிலீஸாக இருக்கிறது.

kanchana 3muni 4 kanchana 3OviyaRaghava LawrenceVedhika
Comments (0)
Add Comment