‘நாலு போலீஸும் நல்லா இருந்த ஊரும்’ படம் ஜூலை 24-ம் தேதி வருதாம்!

ஜே.எஸ்.கே ஃபிலிம் கார்பரேஷன், லியோ விஷன்ஸ் மற்றும் செவன் சிஸ் என்டர்டெய்ன்மெண்ட் இணைந்து தயாரித்துள்ள ‘நாலு போலிசும் நல்லா இருந்த ஊரும்’ திரைப்படம் வரும் ஜூலை 24 ஆம் தேதி வெளிவருகிறது.

ஸ்ரீகிருஷ்ணா இயக்கத்தில் அருள்நிதி ஜோடியாக ரம்யா நம்பீசன், சிங்கம்புலி, ‘நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்’ புகழ் பக்ஸ், ராஜ் இவர்களுடன் யோகி பாபு முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர்.

விஜய் சேதுபதி நடிப்பில் வெளிவந்த ‘நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்’ படத்தின் வெற்றியை தொடர்ந்து ஜே.எஸ்.கே. ஃபிலிம் கார்பரேஷன் மற்றும் லியோ விஷன்ஸ் கூட்டாக தயாரிக்கும் திரைப்படம் எனபதால் ரசிகர்கள் மத்தியில் இப்படத்திற்கு எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.

“‘டிமான்டி காலனி’ திரைப்படத்தின் வெற்றிக்கு பிறகு அருள்நிதி நடிப்பில் வரும் இந்தப்படம் ஒரு முழுநீள காமெடி திரைப்படம் ஆகும். ஆகவே நிச்சயம் இந்தப் படம் மக்களை மகிழ்வித்து வணிக ரீதியிலும் பெரிதும் வெற்றி பெரும்” என நம்பிக்கையோடு காத்திருக்கிறார் தயாரிப்பாளர் ஜே.எஸ்.கே.சதீஸ்.

Arul NithiNaalu Policeum Nalla Irundha Oorum News
Comments (0)
Add Comment