தலைப்பு சிங்கிளாக இருந்தாலும் படத்தில் பல கேரக்டர்கள் உண்டு. அதில் ஒன்று தான் மொட்டை ராஜேந்திரனின் கேரக்டர்.
காதல், காமெடி கலந்த இந்தப் படத்தில் லண்டன் வாழ் தமிழராக எப்.எம் ரேடியோவில் ஆர்.ஜே வேலை செய்பவராக நடித்திருக்கிறாராம் மொட்டை ராஜேந்திரன்.
‘மிஸ்டர்.லவ்’ என்ற பெயரில் காதலை சேர்த்து வைப்பதற்கும், காதல் தோல்வியில் விரக்தி அடைந்தவர்களுக்கு, சிங்கிளாக இருப்பவர்களை மிங்கிளாக மாற்ற ஐடியாக்களை கொடுப்பது தான் படத்தில் இவருக்கு முக்கிய வேலையாம்.
நாயகன் தினேஷூடன் சேர்ந்து காமெடியில் பட்டைய கிளப்பி, வெளுத்து வாங்கி இருக்கிறார். தமிழ்சினிமாவில் தன் குரலுக்கென்று ஒரு கூட்டத்தை வைத்திருப்பவரை படத்தில் ஒரு ஆர்.ஜே வாக பார்ப்பது ரசிகர்களுக்கு புது அனுபவமாக இருக்கும்” என்று நம்பிக்கையோடு சொல்கிறது படக்குழு.