பெரிய ஹீரோக்களின் பட வாய்ப்பு வருகிறதென்றால் படத்தில் தனக்கு என்ன கேரக்டர் என்பதைக் கூட கேட்காமல் கால்ஷூட் கொடுத்து விடுவது இளம் நடிகைகளுக்கு வழக்கம் போல.
அப்படித்தான் விஜய்யின் ‘புலி’ பட வாய்ப்பு தேடி வந்த போது உச்சி குளிர்ந்து போன ‘அட்டகத்தி’ நந்திதா தொடர்ந்து பத்து நாட்கள் கால்ஷூட் கொடுத்தார்.
பத்து நாட்கள் கால்ஷூட் என்பதாலும், படத்தில் விஜய்க்கு மனைவி கேரக்டர் என்பதாலும் எப்படியும் நமக்கு கொஞ்சமாவது முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருக்கும் என்று எதிர்பார்த்தார்.
ரிலீசானவுடன் பெரிய எதிர்பார்ப்புடன் ‘புலி’ படத்தைப் பார்த்தவர் அதிர்ச்சியாகி விட்டார்.
படத்தில் 10 நிமிடங்கள் கூட அவரது காட்சிகள் இல்லை. இடம்பெற்றிருந்த ஒரு சில காட்சிகளிலும் ஒரு ஜூனியர் ஆர்ட்டிஸ்ட் போல ஒரு வசனம் கூட இல்லாமல் போனதில் ரொம்பவே நொந்து போயிருக்கிறார் நந்திதா.
விசாரித்த போதுதான் தெரிந்திருக்கிறது படத்தின் நீளம் கருதி எடுத்த சீன்களில் முக்கால்வாசியை வெட்டி எரிந்திருக்கிறார் இயக்குநர் சிம்புதேவன்.
அதனால் தான் படத்தில் அவருக்காக காட்சிகளும் குறைந்து விட்டன.
இப்போ ‘நொந்து’ என்ன பிரயோசனம் நந்திதா..?