ஹாலிட்டிலும் கால் பதித்த நெப்போலியன்!

மிழ்த்திரையுலகில் இயக்குனர் இமயம் பாரதிராஜாவால் ‘புது நெல்லு புது நாத்து’ படத்தில் வில்லனாக அறிமுகப்படுத்தப்பட்டவர் நெப்போலியன்.

தொடர்ந்து கீழக்குச் சீமையிலே உள்ளிட்ட பல படங்களில் வில்லனாகவும், சீவலப்பேரி பாண்டி, எட்டுப்பட்டி ராசா போன்ற படங்களில் ஹீரோவாகவும் நடித்தவர் பல மொழிகளிலும் நடித்திருக்கிறார்.

பின்னர் அரசியலுக்குள் நுழைந்தவுடன் நடிப்பதை வெகுவாக குறைத்துக் கொண்டவர் கடந்த ஐந்து வருடங்களாக குடும்பத்தோடு அமெரிக்காவில் செட்டிலாகி விட்டார். அவ்வபோது சில தமிழ்ப்படங்களில் நடித்து வந்தவரை அங்குள்ள ஹாலிவுட் திரையுலகமும் அவரை நடிப்புலகுக்கு அழைத்துக் கொண்டிருக்கிறது.

கைபா பிலிம்ஸ் தயாரிக்கும் “டெவில்ஸ் நைட்: டான் ஆப் தி நைன் ரூஜ்” என்ற ஆங்கிலப் படத்தில் அறிமுகமாகிறார் நெப்போலியன்.

இத்திரைப்படத்தில் அருங்காட்சியக பொறுப்பாளர் என்ற ஒரு முக்கியமான வேடமேற்றிருக்கும் நெப்போலியன், இதன் மூலம் சர்வதேச அரங்கில் ஒரு நடிகராக அறிமுகமாகிறார்.

குற்றப்பின்னணியுடைய இக்கதைக்கு தனித்துவமான அமானுஷ்யங்கள் திகில் சேர்க்கிறது. இத்திரைப்படத்தை எம்மி விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இயக்குனர் சாம் லோகன் கலேகி இயக்குகிறார். நைன் ரூஜாக தற்காப்புக் கலை வல்லுநர் ஜெஸ்ஸி டீன் நடிக்கிறார். ஜெஸி ஜென்சென், பாபி லேனென், ஜான். சி பார்மன், குரோவர் மெக்கேன்ட்ஸ் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.

ஹிப்-ஹாப் பாடகர் எமினெம்மின் இளைய சகோதரர் நாதன் மாதேர்ஸ், இத்திரைப்படத்தின் மூலம் புலனாய்வு அதிகாரியாக அறிமுகமாகிறார். இசையமைத்ததோடு மட்டுமில்லாமல் ஸ்விப்ட்டி மக்வே நடித்தும் அசத்தியிருக்கிறார். இத்திரைப்படத்தின் மூலம் பின்னணி பாடகர் மற்றும் இசை அமைப்பாளரான தேவன் ஏகாம்பரமும் அறிமுகமாகிறார்.

ஒளிப்பதிவு ஆடி, போர்ப்ஸ் உள்ளிட்ட உலகின் முன்னணி நிறுவனங்களுக்கு விளம்பரப்படம் தயாரிக்கும் பிரபல ஒளிப்பதிவாளர் இஸ்தவன் லேட்டங் வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. அதே உயர்தரத்திலான ஒளிப்பதிவு சாதனங்களை இத்திரைப்படத்திற்கும் உபயோகித்துள்ளதால் தரம் பெரிதும் பேசப்படும் என்கிறார்.

பெண்களை முன்னிலைபடுத்தும் திரைப்படங்களுக்கு வரவேற்பு அதிகரித்து வரும் இவ்வேளையில், ஒரு க்ரைம், அமானுஷ்ய கூட்டணி நல்லதொரு வரவேற்பையும், கூடுதலான எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

Actor NapoleonDawn of the Nain RougeDevils Nighthollywood filmNapoleon
Comments (0)
Add Comment