‘நானும் ரவுடிதான்’ படத்தில் நடித்த போது தான் விக்னேஷ் சிவன் வீசிய காதல் வலையில் விழுந்தார் நயன்தாரா.
அதன்பிறகு இருவரும் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்கள் அடிக்கடி வெளியானது. திரைப்பட விழாக்களில் கூட இருவரும் ஜோடியாக கலந்து கொண்டனர். பிறந்த நாள் என்றால் உடனே வெளிநாடுகளுக்கு பறந்து சென்று கொண்டாடுவது அடுத்தடுத்து வெளியான அடையாளங்களால் இருவருமே காதலிக்கிறார்கள் என்பது உறுதியானது.
ஆனால் இருவருமே பல மேடைகளில் ஏறியிருந்தாலும் தாங்கள் காதலர்கள் தான் என்கிற விஷயத்தை வெளிப்படையாகச் சொன்னதில்லை. இந்த சூழலில் தான் சமீபத்தில் விழா ஒன்றில் கலந்து கொண்டு விருது வாங்கிய நயன்தாரா, ”எனது அம்மா, அப்பா மற்றும் என்னுடைய வருங்கால கணவருக்கு நன்றி..!” என்று குறிப்பட்டார். அப்படிப் பேசியதன் மூலம் விக்னேஷ் சிவன் தான் அவருடைய வருங்காலக் கணவர் என்பது உறுதியானது.
பெரும்பாலும் வருங்கால கணவர் என்று நிச்சயமான ஒருவரைத்தான் பெண்கள் குறிப்பிடுவார்கள். அதன்படி பார்த்தால் நயன்தாரா – விக்னேஷ் சிவன் ஜோடியின் திருமணம் ஏற்கனவே நிச்சயமாகி விட்டதோ என்கிற சந்தேகம் எழுந்தது. தற்போது அது உறுதியாகியிருக்கிறது.
நயன்தாராவுடன் தான் நெருக்கமாக இருக்கிற புகைப்படங்களப் பற்றி கருத்து கேட்டபோது ”நான் ஆசீர்வதிக்கப்பட்டு இருக்கிறேன்’ என்று கருத்து சொல்லியிருக்கிறார் விக்னேஷ் சிவன்.
அடுத்தடுத்து வாய்ப்புகள் வந்து கொண்டே இருந்ததால் தனது திருமணத்தை தள்ளி தள்ளி போட்டுக் கொண்டே வந்தார் நயன்தாரா. ஆனால் விக்னேஷ் சிவன் திருமணம் செய்ய நெருக்கடி கொடுத்ததையடுத்து நிச்சயதார்த்தத்துக்கு ஓ.கே சொன்னாராம் நயன்தாரா.
கைவசம் தமிழில் அஜித்தின் ‘விஸ்வாசம்’ படத்திலும், தெலுங்கில் மறைந்த ஆந்திர முதல் மந்திரி ராஜசேகர ரெட்டியின் வாழ்க்கை வரலாறு படத்திலும் நடிக்க பேச்சு வார்த்தை நடந்து கொண்டிருக்கிறது.
இந்தப் படங்களை முடித்த பிறகு விக்னேஷ் சிவனுடன் நிம்மதியாக குடும்பம் நடத்த ஏதுவாக நிரந்தரமாக நடிப்புக்கு முழுக்குப் போட்டு விடுவார் என்கிறார்கள் இருவருக்கும் நெருக்கமானவர்கள்!