உதவின்னா ஓடி வருவார் நயன்தாரா!

டிக்கும் படங்களின் பப்ளிகுட்டிக்குக் கூட வருவதில்லை என்கிற குற்றச்சாட்டு நயன் தாரா மீது எப்போதுமே உண்டு. வெளியில் இருந்து இப்படி அவர் மீது சொல்லப்படும் குற்றச்சாட்டு இப்படிப்பட்டதாக இருந்தாலும் அவரை அருகில் இருந்து பார்ப்பவர்கள் நயனின் நல்ல மனசைக் கண்டு நெகிழ்ந்து போவார்கள்.

தன்னுடன் வேலை செய்யும் மேக்கப் மேன் முதற்கொண்டு படப்பிடிப்பில் தான் அடையாளம் காணும் எத்தனையோ சினிமா கலைஞர்களுக்கு வெளியில் தெரியாமல் பல உதவிகளை செய்தைதை பலனடைந்தவர்களே கண்கலங்கிச் சொல்லும் போது அதை நம்பாமல் இருக்க முடியாது.

சென்னையை குத்தகைக்கு எடுத்து வாட்டி விட்ட மழை வெள்ளத்தில் நடிகர், நடிகைகள் பலரும் போட்டி போட்டு பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிக்கொண்டிருக்க, இப்போது கூட நயன் தாரா வரமாட்டாரா..? என்கிற கேள்வி எழாமல் இருக்குமா?

அந்தக் கேள்விக்கு பதிலும் கிடைத்து விட்டது.

படப்பிடிப்பு ஒன்றுக்காக வெளியூரில் இருந்தாலும் தன்னை வளர்த்தெடுத்த தமிழக மக்கள் பாதிக்கப்படுவதை பார்த்து மன வேதனையடைந்தவர் உடனடியாக Sahodarikku Sasneyam (To sister,with love) என்ற அமைப்பின் மூலமாக பிரபல மலையாள பத்திரிகையான மாத்ருபூமி  மூலமாக சென்னையில் மழை வெள்ளத்தால் பாதிக்கபட்ட பெண்களுக்கு சில பிரத்தியேகமான உதவி பொருட்களை சென்னைக்கு அனுப்பி உள்ளார்.

போதும் போதும் என்று சொல்கிற அளவுக்கு உணவுப்பொருட்கள் மக்களுக்கு கிடைத்துக் கொண்டிருந்தாலும் அதைத்தாண்டி அடுத்த கட்டத் தேவைகளை புரிந்து கொண்டு சுமார் 1000 பேருக்கு உதவக்கூடிய வகையில் உடைகள் மற்றும் சுகாதார சம்மந்தப்பட்ட பொருட்களை அனுப்பியிருக்கிறாராம்.

NayantharaRain Floods Helpநயன்தாரா
Comments (0)
Add Comment