இருவரும் ஒருவரை ஒருவர் மனதாரக் காதலிப்பது வெளிப்படையாக தெரிந்தாலும், எப்போது திருமணம் செய்து கொள்வார்கள்? என்பது மட்டுமே ரகசியமாக இருக்கிறது.
இதனால் விக்னேஷ் சிவனையும் கடைசி நேரத்தில் நயன்தாரா கை கழுவி விடுவார் என்று தான் ரசிகர்கள் கமெண்ட்ஸ் அடித்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் நயனின் திருமணம் தள்ளிப்போவதற்கு நயன் தான் காரணம் என்கிறார்கள்.
விக்னேஷ் சிவன் நயனை திருமணம் செய்யத் தயாராகத் தான் இருக்கிறார். நயன் தான் தயாராக இல்லையாம்.
சமீபகாலமாக கதைத் தேர்வில் அதிக கவனம் செலுத்தி நடித்து வருகிறார் நயன்தாரா. அதில் பெரும்பாலானவை வெற்றியைத் தந்து வருகின்றன. இதனால் அவரைத் தேடி வருகிற பட வாய்ப்புகளும் குறைந்தபாடில்லை.
கைவசம் ஐரா, மிஸ்டர் லோக்கல், சிரஞ்சீவியின் சைரா நரசிம்ம ரெட்டி, கொலையுதிர் காலம், நிவின் பாலியுடன் லவ் ஆக்ஷன் டிராமா, விஜய் – அட்லி இணையும் தளபதி 63 ஆகிய படங்களை வைத்திருக்கிறார். இது போக சுமார் 10 புதிய படங்களையும் வைத்திருக்கிறாராம்.
இப்படி டஜன் கணக்கில் பட வாய்ப்புகள் குவிவதால் திருமணத்தை தள்ளி தள்ளி போட்டுக் கொண்டே இருக்கிறாராம் நயன்தாரா.
34 வயதான நயன் தாரா இந்தப் படங்களை எல்லாம் நடித்து முடிப்பதற்கு குறைந்தது மூன்று வருடங்களாவது ஆகும். ஆக அவருடைய திருமணம் எப்போது நடக்கும் என்பதை நீங்களே முடிவு செய்து கொள்ளலாம்.