தமிழில் ‘நேரம்’ ‘ராஜா ராணி’, ‘திருமணம் என்னும் நிக்காஹ்’ என அடுத்தடுத்த படங்களில் பிஸியாக ஆரம்பித்தார் நஸ்ரியா. இதில் தனுஷின் ‘நய்யாண்டி’ படத்தில் நடித்த போது அவருக்கும், இயக்குநருக்குமிடையே நடந்த இடுப்பைக் காட்டிய பஞ்சாயத்தால் தமிழ்சினிமாவே வேண்டாமென்று தனது தாய்மொழியான மலையாளப் படங்களில் நடிக்க ஆரம்பித்தார்.
அங்கும் ஒரு சில படங்களில் மட்டுமே நடித்தவரின் மார்க்கெட் ஸ்டெடியாக இருந்த நேரம் பார்த்து திடீரென பிரபல மலையாள நடிகர் பகத் பாசிலை காதல் திருமணம் செய்து கொண்டு நடிப்புக்கு முழுக்கு போட்டார்.
திருமணத்துக்குப் பிறகு நடிப்பதை அறவே விட்டு விட்டவர் கர்ப்பமாக இருப்பதாகவும் சில வாரங்களுக்கு முன்பு செய்திகள் வெளியானது. ஆனால் அது வெறும் வதந்தி என்று அதிரடியாக மறுத்தார் நஸ்ரியா.
இதற்கிடையே திருமணத்துக்குப் பிறகும் நடிப்பைத் தொடர ஆசைப்பட்ட நஸ்ரியாவுக்கு அவருடைய கணவரும் நடிகருமான பகத் பாசில் க்ரீன் சிக்னல் கொடுத்திருக்கிறார்.
ஆம், மீண்டும் திரையில் முகம் காட்ட முடிவு செய்திருக்கும் நஸ்ரியா அஞ்சலிமேனன் இயக்கவுள்ள புதுப்படம் ஒன்றில் ரீ-எண்ட்ரி கொடுக்க இருக்கிறார். பிரித்விராஜ் ஹீரோவாக நடிக்கும் இப்படத்தில் நடிகை பார்வதியும் முக்கிய வேடத்தில் நடிக்கின்றார். இந்தப் படத்துக்கு ரசிகர்கள் மத்தியில் தனது நடிப்புக்கு கிடைக்கும் வரவேற்பைப் பார்த்து அடுத்தடுத்த படங்களில் தலை காட்ட முடிவு செய்திருக்கிறாராம் நஸ்ரியா.