போஸ்டர் ஃபுல்லா நயன்தாரா : இருட்டடிப்பு செய்யப்பட்ட விஜய் சேதுபதி!

தொடர் தோல்விகளை சந்தித்து வந்த விஜய் சேதுபதிக்கு தனுஷ் தயாரிப்பில் ரிலீசான ‘நானும் ரெளடி தான்’ திரைப்படம் வெற்றிப்படமாக அமைந்தது.

இதையடுத்து விஜய் சேதுபதி மீண்டும் தமிழில் பிஸியாக ஆரம்பித்திருக்கிறார்.

தமிழில் ‘நானும் ரவுடி தான்’ படத்துக்கு கிடைத்த வரவேற்பை தொடர்ந்து மற்ற மொழிகளிலும் அந்தப்படத்தை ரிலீஸ் செய்ய திட்டமிடப்பட்டது.

இதனையடுத்து வரும் ஜனவரி 29-ம் தேதி இப்படம் தெலுங்கில் டப்பிங் செய்யப்பட்டு ரிலீசாகிறது.

அந்த ரிலீஸ் போஸ்டர்கள் எல்லாவற்றிலும் விஜய் சேதுபதியின் படத்தை போடாமல் நயன்தாராவின் போட்டோக்களை மட்டுமே பெரிய சைசுகளில் போட்டு விளம்பரம் செய்து வருகிறார்கள்.

நயன்தாராவுக்கு தெலுங்கில் பெரிய மார்க்கெட் இருப்பதால் வசூலுக்காக இப்படி ஒரு பப்ளிசிட்டியை செய்கிறோம். மற்றபடி விஜய் சேதுபதியை திட்டமிட்டு இருட்டடிப்பு செய்யவில்லை என்கிறது தயாரிப்பு தரப்பு.

அதற்காக படத்தோட ஹீரோவுக்கு போஸ்டரில் சின்ன இடம் கூடவா இல்ல..?

Naanum Rowdy ThaanNayantharaNenuRowdyneVijay Sethupathiநயன்தாராநானும் ரவுடி தான்விஜய் சேதுபதி
Comments (0)
Add Comment