நயன்தாராவின் நெற்றிக்கண்ணில் அஜ்மல்


நயன்தாரா லீட் ரோலில் நடித்து வரும் படம் நெற்றிக்கண். இப்படத்தில் இப்போது நடிகர் அஜ்மல் இணைந்துள்ளார்.

Rowdy Pictures சார்பில் இயக்குநர் விக்னேஷ் சிவன் இப்படத்தை தயாரிக்கிறார். இயக்குநர் மிலிந்த் ராவ் எழுதி, இயக்குகிறார்.

திரில்லர் திரைப்படமாக உருவாகி வரும் இப்படத்தில் திருப்பம் ஏற்படுத்தும் முக்கிய அஜ்மல் கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

தற்போது வரை “நெற்றிக்கண்” படத்தின் 80 சதவீத படப்பிடிப்பை படக்குழு முடித்துள்ளது. கொரானோ வைரஸ் பாதிப்பினால் படப்பிடிப்பு தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருக்கிறது.

AjmalNayantharaNetrikkan
Comments (0)
Add Comment