கல்யாணம் பண்ணாம சேர்ந்து வாழ்றது தான் பிடிக்கும்! : ஓப்பனாகப் பேசும் நடிகை

சில நடிகைகள் மனதில் பட்டதை வெளிப்படையாகப் பேசத் தயங்குவார்கள். எதற்கு பேசுவானேன்.., சமூகவலைத்தளங்களில் ரசிகர்களிடம் வாங்கிக் கட்டிக்கொள்வானேன் என்கிற பயம் தான் அதற்கு காரணம்.

ஆனால் சில நடிகைகளோ குஷ்பு போல எதற்கும் பயப்பட மாட்டார்கள். வந்து பார் என்கிற ரேஞ்சில் மனதில் பட்டதை வெளிப்படையாகச் சொல்லுவார்கள்.

அப்படித்தான் இருக்கிறது நடிகை நிகிஷா பட்டேன் விடுத்திருக்கும் லேட்டஸ் ஸ்டேட்மெண்ட்.

தமிழில் தலைவன், என்னமோ ஏதோ, நாரதன், கரையோரம் ஆகிய படங்களில் நடித்த இவர் தற்போது இயக்குநர் பி. வாசுவின் மகன் ஷக்தியுடன் 7 நாட்கள் படத்திலும் நடித்து வருகிறார்.

தமிழ், மட்டுமில்லாமல் தெலுங்கு கன்னட மொழிகளிலும் கவனம் செலுத்தி வரும் நிகிஷா கவர்ச்சி காட்டுவதில் கொஞ்சமும் தயங்க மாட்டார்.

கதைக்குத் தேவைப்பட்டால் நீச்சல் உடையில் கூட படத்தில் நடிக்கத் தயார் என்கிற திறந்த மனதுடையவர். அப்படிப்பட்டவர் தான் திருமணம் குறித்து ஒரு அதிரடியான கருத்தை கூறியிருக்கிறார்.

திருமணம் பற்றி நான் சிந்திக்கவில்லை. திருமனம் செய்து கொள்வோரை பார்த்தால் எனக்கு ஆச்சர்யமாக இருக்கிறது. ஒரு ஆணும் பெண்ணும் சேர்ந்து வாழ திருமணம் என்ற பந்தம் தேவையில்லை என்பது என் கருத்து. திருமணம் செய்து கொண்டவர்கள் எல்லாம் சந்தோஷமாக வாழ்கிறார்கள் என்று சொல்லவே முடியாது. என்பது நிகிஷாவின் கருத்தாக இருக்கிறது.

இப்படி சொல்கிற நிகிஷாவின் குடும்பம் ஒரு குஜராத்தி குடும்பமாக இருந்தாலும் அவர் பிறந்தது யு.கேவில் தான். பி.பி.சி டிவி ஷோக்களில் தலைகாட்டிக் கொண்டிருந்தவரை இயக்குநர் எஸ்.ஜே.சூர்யா தான் புலி தெலுங்கு படத்தில் நாயகியாக அறிமுகப்படுத்தினார். படம் படுதோல்வியடைந்தாலும் தொடர்ந்து தமிழ், தெலுங்கு, கன்னட மொழிகளில் நடித்துக் கொண்டுதான் இருக்கிறார் நிகிஷா.

ஃபாரீன் பொறப்பா..? அப்ப பேச வேண்டியது தான்!

7 NaatkalActress Nikesha PatelNikesha Patel
Comments (0)
Add Comment