முன்னணி நடிகைகளில் ஒருவராக நிகிஷா இல்லை என்றாலும் அவ்வப்போது தேடி வரும் தமிழ்ப்படங்களில் நடித்துக் கொண்டு தான் இருக்கிறார். அந்த வகையில் தற்போது கஸ்தூரி ராஜா இயக்கத்தில் ‘பாண்டி முனி’ படத்தில் பிஸியாக நடித்து வருகிறார்.
இவர் பிரபல நடன இயக்குனரும், நடிகருமான பிரபுதேவாவை தனக்கு பிடிக்கும் என்றும், அவரை திருமணம் செய்து கொள்ள ஆசைப்படுவதாகவும் செய்திகள் வெளியானது. அவருடைய இந்த ஸ்டேட்மெண்ட் திரையுலகினரிடையே பரபரப்பாகப் பேசப்பட்டது.
நயன்தாரா உடனான காதல் சமாச்சாரத்துக்குப் பிறகு எந்த நடிகையுடனும் இணைத்து கிசுகிசுக்கப்படாத பிரபுதேவா, திடீரென்று நிகிஷா பட்டேல் உடன் கிசுகிசுக்கப்படுவது இந்தக் காதல் எத்தனை நாளைக்கோ? என்று கோலிவுட்டில் கிண்டலாகப் பேச ஆரம்பித்து விட்டனர்.
ஆனால் இப்படி ஒரு செய்தி சமூக ஊடகங்களில் பரவி வருகிறது என்று தெரிய வரவும் பதறிப் போய் விட்டார் நிகிஷா பட்டேல்.
உடனடியாக ”பிரபுதேவாவை நான் திருமணம் செய்துக் கொள்ள ஆசைப்படுவதாக வந்த செய்திகள் உண்மையில்லை. எனக்கு யாரையும் திருமணம் செய்யும் எண்ணம் இல்லை. பிரபுதேவா எனக்கு நண்பர் மட்டும் தான். மற்றும் என்னுடைய நலனில் அக்கறை கொண்டவர். நான் அவரை சார் என்று தான் கூப்பிடுவேன்” என்று தன் தரப்பிலிருந்து விளக்கம் கொடுத்திருக்கிறார்.
பெரும்பாலும் தன்னைப் பற்றி வேறு ஒரு நடிகருடன் இணைத்து கிசுகிசுவோ, செய்தியோ வந்தால் அடுத்த நொடி ”அவர் எனக்கு பிரதர் மாதிரி” என்று சொல்லி சமாளிப்பார்கள்.
ஆனால் நிகிஷா பிரபுதேவாவை அண்ணன் என்று சொல்லி சமாளிக்காமல் நண்பர் என்று மட்டும் சொல்லியிருப்பது பொறுத்திருந்து பார்க்க வேண்டிய சமாச்சாரமாகத்தான் இருக்கிறது என்கிறார்கள் கோடம்பாக்கத்தினர்.
அதையும் தான் பார்ப்போமே?