இதில் முதல்முறையாக சசிகுமாருக்கு ஜோடியாக நடிக்கிறார் நிக்கி கல்ராணி. இவர்களுடன் ராதாரவி, தம்பி ராமைய்யா, விஜயகுமார், ரேகா, சுமித்ரா, சதிஷ் , மனோபாலா, ரமேஷ் கண்ணா, சிங்கம் புலி, நிரோஷா, யோகி பாபு போன்ற 30 க்கும் மேற்பட்டவர்கள் நடிக்கிறார்கள்.
இன்னும் பெயரிடப்படாத இப்படத்தை, இயக்குனர் சுந்தர்.சி யிடம் உதவியாளராக இருந்த கதிர்வேலு என்பவர் இயக்குகிறார். இந்தப்படம் சசிகுமாருக்கு 19 படமாகும். இப்படத்தில் சசிகுமார் ஐடி நிறுவனத்தில் பணிபுரியும் நபராக வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.
செந்தூர் பிலிம்ஸ் சார்பில் டிடி.ராஜா இப்படத்தை தயாரிக்க, சித்தார்த் ஒளிப்பதிவு செய்ய, சாம்.சிஎஸ் இசையமைக்கிறார். படப்பிடிப்பு பொள்ளாச்சியில் வருகின்ற 11 ஆம் தேதி முதல் நடைபெற இருக்கிறது.