அவதூறு பேசிய வாய்களுக்கு பதிலடி கொடுத்த நித்யாமேனன்!

பார்ட்டி நடந்தால் அதில் கலந்து கொள்வதற்காகவே ப்ளைட்டைப் பிடித்து வந்து விடிய விடிய குத்தாட்டம் போட்டு விட்டுப் போகும் நடிகைகள் ஒரு சிலர் உண்டு.

த்ரிஷாவுக்கு திருமணம் நிச்சயமானபோது அதையொட்டி நடந்த பார்ட்டிக்கு மெனக்கிட்டு ஹைதராபாத்திலிருந்து கிளம்பி வந்து பார்ட்டியை ”சிறப்பித்து” விட்டுப் போனார் சார்மி!

ஆனால் எல்லா நடிகைகளும் அப்படியில்லை. பார்ட்டி என்ற பெயரைக் கேட்டாலே வாந்தி எடுப்பார்கள் சில நடிகைகள். அப்படிப்பட்டவர்களில் ஒருவர் தானாம் நித்யாமேனன்.

மணிரத்னத்தின் ஓ.கே கண்மணிக்குப் பிறகு பல இயக்குநர்களும் அவரைத் தேடி வர ஆரம்பித்திருக்கிறார்கள். அதோடு பல பார்ட்டிகளுக்கும் கலந்து கொள்ளச் சொல்லி அடிக்கடி அழைப்பு வருமாம். அப்படி வரும் அழைப்புகளை முதல் அழைப்பிலேயே கட்செய்து விடுகிறார் நித்யா.

பார்க்க குள்ளமாக இருப்பதால் தான் சங்கோஜப்பட்டுக் கொண்டு பார்ட்டிகளுக்கு நித்யா வருவதில்லை என்று எல்லோரும் கிண்டலடித்துக் கொண்டிருக்க,

”நடிகர்களோட ஒட்டி, உறவாடித்தான் சான்ஸ் வாங்கணும்னு எனக்கு அவசியமில்லை. அப்படிப்பட்ட இடம் தான் இந்த பார்ட்டி கலாச்சாரம்” என்று அவதூறு பேசிய வாய்களுக்கு பதிலடி கொடுத்திருக்கிறார் நித்யா.

Actress Nithya MenennewsNithya Menen
Comments (0)
Add Comment