‘மெர்சல்’ படத்தில் சர்ச்சைக்குரிய வசனங்கள் இல்லவே இல்லை… – சென்சார் அதிகாரி அதிரடி!

விஜய் நடிப்பில் வெளியான மெர்சல் படத்தில் ஜிஎஸ்டி, டிஜிட்டல் இந்தியாவுக்கு எதிராகவும் வசனங்கள், காட்சிகள் இடம்பெற்றுள்ளதாக தமிழக பி.ஜே.பி தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். மத்திய அரசை விமர்சிப்பதாக அவர்கள் கருதும் இந்த காட்சிகளை படத்திலிருந்து நீக்க வேண்டுமென்று தயாரிப்பாளருக்கு நெருக்கடி கொடுத்து வருகிறார்கள்.

பி.ஜே.பி மெர்சல் படத்தில் இடம்பெற்ற இந்தக் காட்சிகளை எதிர்த்தாலும் படத்துக்கு மக்களிடமும், எதிர்க்கட்சியினரிடமும் ஆதரவு பெருகி வருகிறது. மேலும் இந்த படத்தில் இடம்பெற்றுள்ள காட்சிகளில் எந்த தவறும் இல்லை, எல்லாம் உண்மை தான் என்றும் கூறி வருகின்றனர்.

இந்நிலையில் இந்த விவகாரம் குறித்து கருத்து சொல்லியிருக்கும் மண்டல தணிக்கை குழு அதிகாரி மதியழகன் ‘மெர்சல்’ படத்தில் யாரையும் பாதிக்கிற வகையிலோ, சர்ச்சை ஏற்படுத்தும் வகையிலோ வசனங்கள் இல்லை.

கருத்துரிமை அடிப்படையிலேயே ஜிஎஸ்டி வரி தொடர்பான காட்சிகள் உள்ளன. படத்தில் இக்காட்சிகளை நீக்க வேண்டும் என்றால், தணிக்கை குழுவிடம் மீண்டும் அனுமதி பெற வேண்டும் என்று கூறியிருக்கிறார்.

digital indiaGSTMersalMersal Diwalimersal issuemersal releaseThalapathyvijay
Comments (0)
Add Comment