”ஓடி ஓடி உழைக்கணும்” : தனுஷோட ஜோடி இப்போ சந்தானத்துக்கும் ஜோடி!

வாசன் விஷுவல் வென்ச்சர்ஸ் நிறுவனம் சார்பில் கே.எஸ். சீனிவாசன், கே.எஸ்.சிவராமன் தற்போது பாலாஜி தரணிதரன் இயக்கத்தில் காளிதாஸ் ஜெயராம் நடிக்கும் ”ஒரு பக்க கதை” படத்தை தயாரித்து வருகிறார்கள். அந்தப்படம் விரைவில் திரைக்கு வர இருக்கிறது. தொடர்ந்து பிரபுதேவா நடிக்கும் ”எங் மங் சங்” படத்தையும் தயாரித்து வருகிறார்கள்.

இந்த இரண்டு படங்களுடன் தற்போது சந்தானம் நாயகனாக நடிக்கும் “ஓடி ஓடி உழைக்கணும்’’ படத்தையும் தயாரித்துக் கொண்டிருக்கிறார்கள்.

இதில் சந்தானத்துக்கு ஜோடியாக நடிப்பவர் தான் அமோரா தஸ்தர். இவர் வேறு யாருமல்ல அனேகன் படத்தில் தனுஷுடன் ஜோடி போட்டவர் தான் இவர்.

இவர்களுடன் யோகி பாபு நான் கடவுள் ராஜேந்திரன், சுவாமிநாதன், ஊர்வசி மதுசூதனராவ், மன்சூரலிகான், மயில்சாமி இன்னும் ஏராளமான நட்சத்திர நடிகர்கள் நடிக்கிறார்கள்.
ஒளிப்பதிவு – கோபிநாத், இசை – ஜிப்ரான், கலை – வனராஜ், கதை, திரைக்கதை, வசனம் – ஞானகிரி, இயக்கம் – கே.எஸ்.மணிகண்டன்.

முழுக்க முழுக்க காமெடி கலாட்டாவாக வர இருக்கும் இப்படத்தில் போலீஸ் வேடத்தில் சந்தானம் கலக்க இருக்கிறார். படத்தின் படிப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

தனது முதல் இரண்டு படங்களில் தனக்கு ஜோடியாக நடிக்க நாயகிகளை தேர்ந்தெடுப்பதில் ரொம்பவே சிரமப்பட்டார் சந்தானம். முன்னணி நடிகைகள் பலரிடம் கேட்டுப் பார்த்தும் எல்லோரும் சந்தானம் ஜோடி என்றதும் மறுத்த நிலையில் இந்தப் படத்தில் தனுஷ் பட நாயகியே சந்தானம் ஜோடியாக நடிக்க சம்மதம் தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

இதைத்தான் டைம்னு சொல்லுவாங்க போல..?

Odi Odi UzhaikkanumOdi Odi Uzhaikkanum Movie NewsSanthanam
Comments (0)
Add Comment