“இங்க வந்ததால 5 கிலோ எடை குறைஞ்சுட்டேன்” – பிக்பாஸ் போட்டியாளர்களை மிரள வைத்த ஓவியா!

‘பிக்பாஸ்’ நிகழ்ச்சியின் சீஸன் 2 நேற்று முன்தினம் முதல் விஜய் டிவியில் களை கட்டத் தொடங்கியிருக்கிறது.

மொத்தம் 17 போட்டியாளர்கள் அனுப்பப்பட்ட இந்த வீட்டுக்குள் 17வது ஆளாகச் சென்ற ஓவியாவும் ஒரு போட்டியாளராகத்தான் உள்ளே செல்கிறார் என்று எல்லோரும் நினைத்தார்கள்.

ஆனால் அவர் சிறப்பு விருந்தினராக மட்டுமே சென்றார். ஆனால் ஏற்கனவே வீட்டுக்குள் இருக்கும் மற்ற போட்டியாளர்களுக்கு ஓவியா சிறப்பு விருந்தினராக வந்திருக்கிறார் என்கிற விபரம் தெரியாது.

முதலில் அவரும் ஒரு போட்டியாளர் என்று நினைத்தவர்கள் அவரைப் பார்த்ததும் ஜனனி ஐயர், ரித்விகா, மும்தாஜ் போன்றோரின் முகம் கடுகடுவென்று மாற ஆரம்பித்தது.

அதற்குள் செண்ட்ராயன், மகத் ஆகியோர் எல்லோரும் இரண்டு லக்கேஜ் பேக்குகளுடன் உள்ளே வந்த போது ஓவியா மட்டும் எப்படி ஒரே ஒரு பேக்குடன் உள்ளே வந்தார் என்று சந்தேகம் எழுப்பினார்கள்.

அதோடு அவர் கொண்டு வந்த லக்கேஜ் பேக்கையும் ஓப்பன் செய்து பார்த்த போது அதில் வெறும் வாட்டர் பாட்டில் பேக் ஒன்று மட்டுமே இருந்தது.

இதனையடுத்து ஓவியாவை வீட்டில் இருந்து வெளியேறுமாறு உத்தரவிட்டார் பிக் பாஸ். போட்டியாளர்கள் அனைவருக்கும் வாழ்த்து தெரிவித்து விட்டு, சில ஆலோசனைகளையும் கொடுத்தார். பின்னர் நான் இந்த வீட்டுக்குள் வந்த உடன் 5 கிலோ குறைந்து விட்டேன் என்று சிரித்துக் கொண்டே சொன்னவர் ”உங்களை எல்லாம் பார்த்தா எனக்கு பாவமா இருக்கு” என கிண்டலடித்து விட்டு வீட்டில் இருந்து வெளியேறினார்.

ஓவியா வந்ததும் சந்தோஷப்பட்ட அவரது ஆர்மி ரசிகர்கள் ஒரே நாளில் பிக் பாஸ் வீட்டில் இருந்து ஓவியா வெளியேற்றப்பட்டதும் வருத்தப்பட்டனர். அட்லீஸ்ட் ஒரு வாரமாவது எங்க தலைவி ஓவியாவை பிக் பாஸ் வீட்டில் வைத்திருக்கலாமே? என்றும் அவர்கள் சமூக வலைத்தளங்களில் கோரிக்கை வைத்திருக்கிறார்கள்.

கோரிக்கையை பரிசீலிப்பாரா பிக்பாஸ்?

actress oviyaBigg Boss Season 2bigg boss tamilBigg Boss Tamil 2Oviya
Comments (0)
Add Comment