பாயும் ஒளி நீ எனக்கு” படத்தின் டிரெய்லர் வெளியீடு!

கே எம் எச் புரடக் ஷன் சார்பில் கார்த்திக் சவுத்ரி தயாரிக்கும் படம் “பாயும் ஒளி நீ எனக்கு”. இதில் விக்ரம்பிரபு, வாணி போஜன் ஜோடியாக நடித்துள்ளனர். புதுமுக இயக்குனர் ஆர். கார்த்திக் அத்வைத் இயக்கி உள்ளார். சாகர் இசை அமைக்கிறார். எஸ் பி சினிமாஸ் சங்கர் கிஷோர் வெளியிடுகிறார்.பாயும் ஒளி நீ எனக்கு” படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது

இதில் இயக்குனர் கார்த்திக் அத்வைத் பேசியதாவது:

நான் ஹைதராபாத் திலிருந்து வருகிறேன். முதன்முறையாக விக்ரம் பிரபுவை சந்தித்து கதை சொன்னபோது அவர் வியந்து கேட்டார். அதுதான் எனக்கும் பெரிய ஊக்கமாக இருந்தது. ஒரு முதல் பட இயக்குனருக்கு விக்ரம்பிரபு போலவும் இந்த டீம் போலவும் யாரும் சப்போர்ட் செய்வார்களா என்று தெரியவில்லை அதற்காக விக்ரம் பிரபுக்கும் குழுவின ருக்கும் நன்றி. நாயகி வாணி போஜனுக்கும் நன்றி. ஒளிப்பதி வாளருமக்கு எனது நன்றி. என்னுடைய எண்ணத்தை புரிந்துக்கொண்டு காட்சிகளை அழகாக படமாக்கினார். ஸ்டண்ட் மாஸ்டர் தினேஷ் காசிக்கும் நன்றி கேரக்டரை புரிந்துக் கொண்டு ஸ்டண்ட் அமைத்துக் கொடுத்தார். படத்தில் ஒன்பது சண்டைக்காட்சிகள் இருக்கிறது. சூழ்நிலைக்கு ஏற்ப இந்த சண்டைக்காட்சி மாறுபடும். படத்தில் பணியாற்றிய எடிட்டர் சி. எஸ். பிரேம்குமார் நடன இயக்குனர் தாஸ்தா, படத்தை ரிலீஸ் செய்யும் கிஷோர் உள்ளிட்ட அனைவருக்கும் நன்றி.

விழாவில் பத்திரிகை தொடர்பாளர் சங்க தலைவர் டைமண்ட் பாபு பிறந்த நாளையொட்டி படக்குழு முன்னிலையில் கேக் வெட்டி பிறந்த நாள் கொண்டாடினார்.

#PaayumOliNeeYenakku

Actor Vikram Prabhuactress vanibhojandirector Karthik AdwaithPaayumOliNeeYenakku movie