என்ன பேசினால் அது மீடியாக்களில் செய்தியாக வரும் என்பதை தெரிந்து பேசக்கூடியவராகி விட்டார் பவர் ஸ்டார் சீனிவாசன்.
எந்த திரையுலக விழாவாக இருந்தாலும் அசாராமல் மனதில் பட்டதை பேசும் அவர் நேற்று நடந்த பாண்டியும் சகாக்களும் படத்தின் இசை வெளியீட்டு விழாவிலும் அதே போல பேசினார்.
மதுரையைக் கதைக்களமாகக் கொண்டு, காதலும் கலாட்டாக்களுமாக தயாராகியிருக்கும் இப்படத்தை அப்பு கே. சாமி இயக்கியிருக்கிறார்.
இசை சிகிச்சை என்கிற தலைப்பில் பி.எச்.டி படித்துக் கொண்டிருக்கும் ஜீன் இசையில் உருவான ‘பாண்டியும் சகாக்களும்’ படப்பாடல்களும் மற்றும் படத்தின் ட்ரெய்லரும் இந்த விழாவில் வெளியிடப்பட்டன.
விழாவில் மூத்த இயக்குநர்கள் அதியமான், மனோஜ்குமார், நடிகர் பவர் ஸ்டார், ஆச்சி மசாலா நிறுவனர் ஐசக், பி.ஆர்.ஓ யூனியன் செயலாளர் ஜான் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.
விழாவில் பவர் ஸ்டார் சீனிவாசன் பேசும் போது, “ இந்தப் படத்தில் ஒரு பாட்டுக்கு நடனமாட அழைத்தார்கள் நான் என்ன சிலுக்கா..? என்று கேட்டேன். ஆனாலும், நான் ஆடினால் படம் ஓடும் என்று நம்பி வருகிறார்கள், அவர்கள் நம்பிக்கையைக் கெடுக்க விரும்பவில்லை. என்றவர் அடுத்து பேசியது தான் ஹைலைட்
என்னைப் பற்றியும் நிறைய வதந்திகள். ஆனால் எதைப்பற்றியும் கவலைப்படாமல் சினிமாவில் முன்னேறிக் கொண்டே இருப்பேன். கலைத்தாய் என்னை தத்தெடுத்துக் கொண்டிருக்கிறாள். ” என்று அதிர வைத்தார்.
இது உங்களுக்கே கொஞ்சம் ஓவரா தெரியலையா பவர் ஸ்டார்?