மிஷ்கின் இயக்கத்தில் விஜய்சேதுபதி !

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநர் மிஷ்கின் இயக்கத்தில், முருகானந்தம் அவர்கள் வழங்கும் ராக்போர்ட் என்டர்டெயின்மென்ட் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் ‘பிசாசு-2’. இந்தப் படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. ‘பிசாசு-2’ படத்தில் விஜய் சேதுபதி ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

இயக்குனர் மிஷ்கினின் கலை ஆர்வம் குறித்தும், விஜய் சேதுபதி எவ்வாறு இப்படத்தில் இணைந்தார் என்பது குறித்த ருசிகர தகவல்களை பகிர்ந்துள்ளார். ‘பிசாசு-2′ கதையை சுருக்கமாக சொன்னார். ஒவ்வொரு கேரக்டரையும் எப்படி உருவாக்கி வைத்திருக்கிறார் என்பதை சொல்லும்போது சினிமா கலைஞனாக பெருமிதம் அடைந்தேன். நாம் இருவரும் சேர்ந்து படம் பண்ணுவோம். அதுவும் சீக்கரமாக பண்ணுவோம் என்றேன், எனவே பிசாசு 2 படத்தில் எனக்காக ஒரு பிரத்யேகமாக சிறிய கதாபாத்திரத்தை உருவாக்கியுள்ளார். உங்கள் சிந்தனையில் நான் படம் பண்ணனும். நான் ரெடியாக இருக்கிறேன்.உங்களுடன் படம் பண்ணம்போது சினிமாவை மேலும் கற்றுக்கொள்ள முடியும்’ என்று தெரிவித்து உள்ளார்.

actor vijaysethupathiactress Andrea JeremiahDirector MysskinPisasu2 movieRockFort Entertainment