திருமணம் நடந்தது உண்மை தான், ஆனால்..? : பூனம் பாஜ்வா விளக்கம்

தென்னப்பா வம்பாப் போச்சு? என்று யோசித்தவர் இனியும் அமைதியாக இருந்தால் குழந்தை, குட்டி என்றெல்லாம் கதை கட்ட ஆரம்பித்து விடுவார்கள் என்று பயந்தவர் அந்த வதந்திக்கு மறுப்பு தெரிவித்திருக்கிறார்.

விஷயம் இதுதான் தமிழில் ‘சேவல்’, ‘தெனாவெட்டு’, ‘ஆம்பள’ உட்பட சில படங்களில் நடித்த பூனம் பாஜ்வா திடீரென்று திருமணம் செய்து கொண்டு செட்டிலாகி விட்டதாக சமீபத்தில் பிரபல நாளிதழ் ஒன்றில் செய்தி வெளியானது.

கைவசம் ‘போகி’ உட்பட இரண்டு தமிழ்ப்படங்களையும், மலையாளத்தில் இரண்டு படங்களையும் வைத்திருக்கும் பூனம் எப்படி இப்படி ஒரு முடிவை எடுத்தார் என்பது தான் அவரை கமிட் செய்த தயாரிப்பாளர்களின் கவலை.

அந்தச் செய்திக்கு மறுப்பு தெரிவித்த நடிகை பூனம் பாஜ்வா ‘அது முற்றிலும் தவறான செய்தியாகும். சமீபத்தில் எனது தங்கைக்குத் தான், திருமணம் நடைபெற்றது. அதை எனக்கு நடந்ததாக எண்ணி தவறான செய்தி வெளியிட்டுள்ளனர். எனக்கு திருமணம் நடக்கும் போது, இந்த உலகமே அறியும் வகையில்,வெகு சிறப்பான முறையில் நடைபெறும்’ என்று அவர் கூறியுள்ளார்.

BhogiPoonam bajwaபூனம் பாஜ்வாபோகி
Comments (0)
Add Comment