‘போர்க்களத்தில் ஒரு பூ’ படத்துக்கு வந்த சிக்கல்!

லங்கையில், தமிழீழ ஊடக அறிவிப்பாளராக இருந்த, இசைப்ப்ரியாவின் வாழ்க்கையை மையமாக வைத்து போர்க்களத்தில் ஒருபூ என்ற பெயரில் ஒரு படம் தயாரிக்கப்பட்டுள்ளது.

இப்படத்தில் உள்ள சில காட்சிகளை ஆட்சேபித்து சென்ஸார் அமைப்பினர் சென்ஸார் சர்ட்டிபிகேட் கொடுக்க முடியாது என்று சொன்னதால் படம் ரிலீசாவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து அப்படத்தின் இயக்குனர் கணேசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது :

‘போர்க்களத்தில் ஒரு பூ’ திரைப்படம் முடிந்து கடந்த 11-ந்தேதி தணிக்கைக்கு ஏற்பாடு செய்திருந்தோம். ஆனால் தணிக்கை அதிகாரியின் விருப்பத்திற்கு ஏற்ப, அதனை 12-ந்தேதிக்கு மாற்றி அமைத்து ஏற்பாடு செய்தேன். அன்றைய தினம் காலை 11 மணி முதல் பிற்பகல் 1.40 மணி வரை படத்தை பார்த்த தணிக்கை அதிகாரி ஜெயந்தி முரளிதரன் என்னை அழைத்தார். ‘உங்கள் தயாரிப்பாளர் எங்கே? அவரது வீடு எங்கே?’, என்று கோபமாகவும், சற்று வித்தியாசமாகவும் கேட்டார். ‘உடல் நிலை சரியில்லாத காரணத்தால் தயாரிப்பாளர் வரவில்லை’, என்று நான் கூறினேன்.

‘படத்தின் விண்ணப்பதாரரும், இயக்குனருமாகிய நான் இருக்கிறேன். எனவே தயாரிப்பாளர் வரவேண்டிய அவசியம் இல்லை’, என்று அமைதியான முறையில் கூறினேன்.

‘நம் நட்பு நாட்டை பற்றியும், நட்பு நாட்டு ராணுவ வீரர்கள் பற்றியும் ஏன் இப்படி அவதூராக சொல்லி உள்ளீர்கள்? அது தவறானது’, என்று என்னுடன் வாதம் செய்தார்.

‘நட்பு நாடு இலங்கை என்றால், எதிரி நாடு என்று யாரை சொல்கிறீர்கள்?, நட்பு நாடு என்று சொல்லிக்கொண்டு தமிழர்களை கொல்வதும், தமிழ் பெண்களை கற்பழித்ததும் நியாயமான செயலா?’, என்று அதிகாரியிடம் நான் கேட்டேன்.

நீங்கள் சொல்வதற்கு ஆதாரம் எங்கு உள்ளது? என்று அவர் கேட்டார். சில ஊடகங்களில் வெளியான அனைத்து ஆதாரப்பூர்வமான சாட்சிகளின் அடிப்படையில் தான் இந்த படம் எடுக்கப்பட்டுள்ளது’, என்று நான் கூறினேன்.

ஆனால் இலங்கை நம் நட்பு நாடு என்றும் நட்பு நாட்டின் ராணுவ வீரர்களை தவறாக சித்தரித்ததால் இந்த படத்துக்கு தணிக்கை கிடையாது. இதுகுறித்து நாங்கள் மும்பை தணிக்கை முதன்மையாளர் மற்றும் வேறு இடத்திலும் கடிதம் எழுதுவோம்’, என்று சொல்லிவிட்டார்.

‘வேண்டும் என்றால் ‘ரிவைசிங் கமிட்டி’க்கு நீங்கள் பரிந்துரை செய்துகொள்ளுங்கள். அவர்கள் தீர்மானிக்கட்டும். பிறகு வேண்டுமானால் உங்கள் விருப்பப்படி, மும்பையோ அல்லது டெல்லி எப்.சி.ஏ.டி டிரிபியூனலுக்கோ போகிறேன்’, என்று நான் கூறினேன். ஆனால் அவர்கள் மறுத்துவிட்டார்.

இசைப்பிரியா இறந்த நாளான இன்று (திங்கட்கிழமை) இந்த படத்தை வெளியிட திட்டமிட்டிருந்தோம். அது முடியாமல் போய்விட்டது என்பதை வருத்தத்தோடு தெரிவித்து கொள்கிறேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

IsaipriyaPorkalathil Oru Poo Censor IssuePorkalathil Oru Poo News
Comments (0)
Add Comment