பயங்கரமான பேய்ப் படம் : பரத் நடிக்கும் ‘பொட்டு’

மாபெரும் வெற்றி பெற்ற மைனா, சாட்டை , மொசக்குட்டி போன்ற படங்களை தயாரித்த ஷாலோம் ஸ்டுடியோஸ் ஜான்மேக்ஸ், ஜோன்ஸ் இருவரும் இணைந்து தயாரித்திருக்கும் ”சவுகார்பேட்டை” படம் இம்மாதம் வெளியாகிறது.

ஸ்ரீகாந்த் – ராய்லட்சுமி நடித்திருக்கும் சவுகார்பேட்டை படம் எல்லா ஏரியாவும் விற்று தீர்ந்து விட்டது. படத்தின் தரம் உயர்வாக வந்துள்ளதாலும், வியாபாரம் திருப்திகரமாக நடந்துள்ளதால் தயாரிப்பாளர்கள் ஜான்மேக்ஸ் – ஜோன்ஸ் இருவரும் இயக்குனர் வடிவுடையானுக்கு புதிய கார் ஒன்றை வாங்கி பரிசளித்துள்ளனர்.

அத்துடன் அடுத்த படமான பொட்டுவையும் வடிவுடையான் இயக்கத்திலேயே தயாரிக்கிறார்கள். ”பொட்டு” படத்தில் நாயகனாக பரத் நடிக்கிறார். கதாநாயகியாக முன்னணி நடிகை ஒருவர் நடிக்கிறார். மற்றும் சரவணன், கருணாஸ், சுமன், சிங்கம்புலி, ஊர்வசி ஆகியோரும் நடிக்கிறார்கள்.

நடிகை ஜெயசித்ராவின் மகன் அம்ரீஷ் இசையமைக்கிறார்.

எழுதி இயக்குபவர் வடிவுடையான்.

படத்தின் படப்பிடிப்பு இம்மாதம் துவங்குகிறது. சவுகார்பேட்டை போன்றே இதுவும் திகில் கலந்த பேய் கதையாக உருவாகிறது.

மெடிக்கல் காலேஜ் பின்னணியில் பேய்க்கதையை திரைக்கதையாக அமைத்திருக்கிறோம் என்றார் வடிவுடையான்.

BharathPottu Movie news
Comments (0)
Add Comment